உரைநடை வரலாற்றில் தனித்ததோர் இடம்பெற்றுத் மகழ்கிறது. இனி அவருடைய பீடு நிறைந்த பெருவாழ்வினையும், அவர் வாழ்நாளிலே அவர் ஆற்றிய தொண்டுகளையும் காண்போம். திரு வி, க. அவர்களின் உரைநடைத் தொண்டிற்கு முன் தமிழ்மொழி ஒலி குன்றி நின்றது. வேண்டாத சந்திச் சேர்க்கைகள், வடமொழிச் சொற்களையும் தொடர்புகளையும் வேண்டுமென்றே பயன்படுத்துதல், கருத்துத் தெளிவிற்கு முதன்மை தராத அலைவுப் போக்கு, முதலிய வகைகளில் தமிழ் உரைநடை தடுமாறித். தவித்தது. இந்நிலையில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திரு.வி.க எழுகிய நூல்கள் தமிழ் உரைநடைக்குப் புதுப் போக்கும் பொலிவும் தந்தது எனலாம்: தமிழ் உரைநடை தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களால் ஊக்கமும் ஆக்கமும் பெற்றது. ஆங்கில உரைநடைக்கு ஒரு டிரைடன் (Dryden) வாய்த்தது போலத் தமிழ் உரைநடைக்கு வாய்த்தவரே திரு.வி.க. திரு.வி.க. அந்நாளில் ஆங்கிலம் நன்கு பயின்றவர்; அண்ணல் காந்தியடிகள் தென்னாட்டுக்கு வருகை தந்த பொழுதெல்லாம் அவர் சொற்பொழிவாற்றிய கூட்டங். களில் இவர் மொழிபெயர்ப்பாளராக இருந்து உதவியிருக் கிறார். காந்தியடிகள் திரு.வி.க. அவர்களை மொழி. Gl uuufflʻjt urramiñʼ (Translator) என்றே அழைப்பது. வழக்கம். காந்தியடிகள் 'ஹரிஜன்’ பத்திரிகையில், எழுதிய அரிய கருத்துக்களையெல்லாம் தாம் ஆசிரியராக இருந்து நடத்திய தேசபக்தன், நவசக்தி முதலிய இதழ் களில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். உரைநடை
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/279
Appearance