o 280 இலக்கிய ஏந்தல்க யில் மூன்றுவகை உரைநடைகள் அவர்தம் எழுத்திரி பொருந்தியதாக அவரே எழுதியுள்ளார். மொழிநடையும் அவரவர் இயற்கைக்கேற்ற வண்ணம் அமையும், இயற்கை அமைவைக் குறித்து போராட்டம் எதற்கு? என்னுடைய வாழ்க்கையில் மூவித நடைகள் மருவின. ஒன்று இளமையில் உற்றது; இன்னொன்று சங்க இலக்கியச் சார்பு பெற்றபோது பொருந்தியது; மற்றொன்று பத்திரிகை யுலகை அடைந்த நாளில் அமைந்தது. இறுதியே எனக்கு உ ரி ய தாய்-உடையதாய்-நிலைத்தது. இந்நடை எளியது: சிறுசிறு வாக்கியங்களால் ஆவது. இந்நடையிலும் நூலுக்கேற்ற-காலத்துக் கேற்ற-அமைவுதானே பெறும். இவ்வாறாகத் தம் நடை குறித்தே குறிப்பிடும் திரு.வி.க. வின் எழுத்துகள் தமிழில் விளைவித்த மாற்றங்களை ஊன்றி நோக்கவேண்டும். திரு.வி.க. அரசியலிற் புகுந்த காலத்தில் அரசியல் மேடைகளில் தமிழ் இல்லை. அன்னைத் தமிழ் அரசோச்ச வேண்டிய இடத்தில் அன்னிய ஆங்கிலம் வீறுகொண்டு விளங்கியது. அரசியலில் ஈடுபட்டவர்களும் மேட்டுக்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாய்த் திகழ்ந் தார்கள். எனவே ஆங்கிலமே தனி ஆதிக்கம் செலுததி வந்த அரசியல் துறையிற் புகுந்து அன்னைத் தமிழ் அழகுடன் வளர அரும்பாடு பட்டார் திரு.வி.க. அவர் அந்நாளில் போகாத ஊர் இல்லை; ஏறாத மேடை இல்லை என்னும் அளவிற்கு அவர்தம் தொண்டு துலங் கியது. காலத்திற்கேற்பத் தேசபக்தியினை அவர்மாட்டும் திறங்கண்டு தெளிவோமாக. ---- -- in 't
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/280
Appearance