பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேசசக்தி என்பது கடவுள் பக்தியில் ஒரு கூறு. கடவுள் பக்தி என்பது ஒருத்தியும் ஒருவனும் கூடி வாழும் இல்லத்தினின்றும் அரும்புவது. பின்னை அது பல வழியில் பெருகிப் பெருகி முடிவில் எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டொழுகும் ஒரு பெரும் நிலை கூட்டும். எவ்வுயிரையும் தன்னுயிரெனக் கருதித் கொண்டு செய்வது கடவுள் பக்தியாகும். இப்பக்தி பிற தேயங்களைத் துன்புறுத்துவதால் ஒருபோதும் விளையாது. கடவுள் பக்திக்குரிய பல திறப்படி களுள் ஒன்றாகவுள்ள தேசபக்தி, பிற தேசங்களை வருத்துவதற்கெனப் பயன்படுத்தப்பெறின், அது கடவுள் பக்தியில் கூறாகுங்கொல்: பிற தேசங்களிடம் பகைமை கொள்வது, கடவுள் பக்திக்குப் படியாயுள்ள தேசபக்தியாகாதென்பதை ஈண்டு மிக உரமாக வலியுறுத்துகிறோம்: அரசியலில் துய்மை காத்து, காந்தியத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதில் தலையாயபங்கு திரு.வி க.விற்கு உண்டு. காந்தியடிகளுடைய கொள்கைகளைத் தமிழ் மக்க ளிடையே திரு வி.க. திறம்படப் பரப்பினார். அவருடைய 'மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூல் மனித குலம் படித்து உய்யவேண்டிய நூலென்று சொல்ல லாம். திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து, நாட்டு விடுதலைக்குத் தொண்டு செய்து பின் கட்சி அரசியலிலிருந்து விலகினார். அரசியற் பணிகளிலும் சமுதாயப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட திரு.வி.க. பெண்ணின் பெருமை துலங்க வேண்டும் என்பதற்காகத் தம் வாழ் நாளில் தொடக்கத்திலிருந்து முடியும் வரையிலும் உறுதி யான தொண்டாற்றிவந்தார். பெண்ணின் பெருமையைப்