பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 2 இலக்கிய ஏந்தல்கள் புலப்படுத்துவதற்கே பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை நலம்' என்னும் ஒப்புயர்வற்ற நூலினை எழுதினார். பெண்ணினம் என்றென்றைக்கும் இந்நூல் எழுதியவர் என்பதன் காரணமாக திரு.வி.க. விற்கு நன்றி செலுத்தும் கடப்பாட்டிற்குரியதாகும். "பெண்மை'யைத் திரு.வி.க. விளக்கும் திறம் பாராட்டம் காலது அடக்கம், பொறுமை, தியாகம், பாநலம், இரக்கம், அழகு, ஒப்புரவு, தொண்டு முதலியன அமைந்த ஒன்று பெண்மை எனப்படும். மண், நீர், காற்று, ஒளி முதலியன சேர்ந்து மரமாதல் போல, அடக்கம் முதலிய குணங்கள் சேர்ந்து பெண்மையா கின்றன. சிறுசிறு நீர்த்துளிகள் கலந்து பரந்த நீர் நிலை என்னும்,பெயர் பெறுதல் போலவும். அடக்கம் முதலிய குணங்கள் ஒன்றி, அவை பெண்மை என்னும் பெயர் பெற்றன. என்று விளக்குவதோடு தமிழ்ப் பெரியார் அவர்கள் நிற்க வில்லை. பெண்ணை எவ்வாறு பெற்றோர் இளமைக் காலந்தொட்டு வளர்த்து வர வேண்டும் என்பதற்கும் விளக்கமாகச் சில செய்திகளைச் செப்பமுறுகின்றார். பெற்றோர் தமது பெண்ணிற்கு இளமையிலேயே இயற்கையைக் காட்டிக் காட்டி, ஆடல் பாடல்களை அறிவுறுத்துவது நல்லது. மரம், செடி, கொடி, மலை, நிலா, ஞாயிறு முதலிய இயற்கைப் பொருள் நினைவு தோன்றும் வழியில் பெண்ணை ஆடுமாறும் பாடு மாறும் பெற்றோர் வளர்த்தல் வேண்டும. தமது நாட்டில் பழைய தாய்மார் பனைப்பாட்டு, மலைப் ப்ாட்டு, நிலாப்பாட்டு, வானப்பாட்டு, பறவைப்பாட்டு