பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 இலக்கிய ஏந்தல்க ள் சேக்கிழார் முதலியோர் ஆங்கிலம் பயின்றா உலகம் போற்றுங் காவியங்களை எழுதினார்? ஆகவே, ஒரு நாட்டு மொழியே கல்விக் குடையது என்று கொள்ள இயற்கையில் எந்நியதியுமில்லை என்பதை உணர்க. அவரவர் தத்தம் தாய்மொழியிலேயே கல்விபெறலாம். மாணவர்களின் நல்வாழ்வு குறித்துக் கவலை கொண்ட நெஞ்சினராய்த் திரு.வி.க அவர்கள் மாணாக்கர் உண்ண வேண்டிய உணவு குறித்தும் உன்னி உரைப்பனவற்றை நோக்கவேண்டும். உணவில் மாணாக்கர் பெருங் கவலை செலுத்தக் கடமைப் படல் ைேண்டும், இரண்டு வேளை பொருந்திய உணவு கொள்வது சால்பு. ஒருநாளைக்கு நான்கு ஐந்து முறை சாப்பிடுவது நோய்க்குக் கால் கொள்வதாகும். காப்பி, டீ, ஒவல்டையன், புலால், தீட்டிய அரிசி முதலிய உணவுப் பொருள்கள் பொருந்தியனவல்ல. கைக்குத்தலரிசி, கீரை, மோர், பழம், தேங்காய், வாதுமை, நிலக்கடலை முதலிய வற்தை முறைப்படி அளவாக உண்பது நலன் இவ்வாறு பெண்ணுலகு மேம்படவும், இளைஞருலகம் ஏற்றம் பெறவும் திண்ணமுற மொழிந்த திரு.வி.க. அவர்கள் சமயவுலகிலே காழ் கொண்டிருக்கும் வழக்குகளை, வேறுபாடுகளை, மாறுபாடுகனை அகற்றக் குறிக் கொள்கிறார். முதலாவதாக மணம், இளமை, கடவுட்டன்மை, அழகு முதலியன கொண்டதோர். பொருளாக முருகனைக் காண்கிறார். முருகு என்னும் அழியா அழகை உணர்ந்தவர்.பால் என்றும் மனமே கமழ்ந்து கொண்டிருக்கும்’ என்று குறிப்பிட்டு வாழும் நெறியினை வகையற உணர்த்துகின்றார் திரு.வி.க. அது. வருமாறு,