பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. air. E87 துலங்குகின்றது. பெரியார் தம் தொண்டினைத் திரு.வி.க. மொழியில் காண்போம். இராமசாமி நாயக்கர் (பெரியார்) ஒத்துழையா இயக்கத்தில் உள்ளும் புறமும் ஒன்றுபடி உழைத்தவர். தமிழ்நாட்டில் கதரைப் பரப்பிய பெருமை அவருக்கே உண்டு. தீண்டாமைப் பேயையோட்ட அவர் பட்ட பாட்டை ஆண்டவனே அறிவன். அவர் வைக்கம் வீரராய் இலங்கியதை நாடறியும். நாட்டின் விடுதலையைக் குறிக் கொண்டு அவர் பலமுறை சிறை நண்ணியவர். இள்வாறு தம் சம காலத்தே வாழ்ந்த முக்கியமான ஒவ்வொருவர் குறித்தும் திரு.வி க. எழுதி வைத்திருக்கும் குறிப்புக்கள் வரலாற்றுப் பக்கங்கள் எனலாம் இவ்வாறு பேச்சாளராயும், எழுத்தாளராயும். சமயத் தொண்டராயும், சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட வராயும், பெண்ணுரிமை பேணியவராகவும், இளைஞருல கிறகு ஏற்றம் தந்தவராகவும் தொழிலாளர் இயக்கம் கண்ட தலைவராகவும் நாட்டு விடுதலைப் போரிற் பங்கு கொண்ட ஊழியராகவும் விளங்கிய திரு.வி.க. அவர் களிடத்திலே அனைத்திற்கும் மேலாகத் தமிழ் உரைநடை யில் ஒரு புதுமை விளைவிக்க வேண்டும் என்ற வேடகை இருந்தது. நாயன்மார் வரலாறு என்று பெரியபுராணத்தை யொட்டி அவர் எழுதிய நூல் எளிமையும் இனிமையுங் கொண்டு திகழ்கின்றது; பெரியபுராணத்தின் பிழிவாய்த் துவங்குகின்றது. அவருடைய உரைநடையின் மாட்சியினை ஒரு சிறிது உணர்ந்து கொள்ள வேண்டுமெனிற் பின்வரும் பகுதி அதற்கு அரண் கோலுவதாயுளது.