உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 இலக்கிய ஏந்தல்கள் செம்கொன்னையுருக்கி வார்த்தாலெனக் காட்சி யளிக்கும் அந்தி வான் செக்கரழகும், கொண்டல் கொண்டலாக ஒடும் புயலின் - அழகும், அது பொழி li யும் மழையின் அழகும், அத்தன்புனல் மணற்கற்களை அரித்தோடும் அருவியின் அழகும், பச்சைப் பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொழில்களின் அழகும், அவைகளில் பச்சைப் பாம்பெனப் பின்னிக் கிடக்கும் பசுங்கொடிகளின் அழகும். அவைகளி னின்றும் அரும்பியுள்ள நகை மலரின் அழகும், மக்கள் உள்ளத்துள்ள இன்ப ஊற்றைத் திறப்பனவல்லவோ? மயிலாடும் அழகும், மான் நடக்கும் அழகும், நந்துாரும் அழகும் புலவருக்கு விருந்தல்லவோ? திரு.வி.க. அவர்கள் தம் கண்பார்வை இழந்த பிறகு உரைநடையைக் கைவிட்டுத் தம் கருத்துகளைச் செய்யுளில் வடிக்க முற்பட்டார். பொதுமை வேட்டல், 'உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல்', 'முருகன் அருள் விேட்டல்’, 'திருமால் அருள் வேட் டல்’, ‘சிவனருள் வேட்டல்”, “கிறிஸ்துவின் அருள் வேட்டல்’, ‘புதுமை வேட்டல்”, “கிறிஸ்து மொழிக் குறள் முதலான பல செய்யுள் நூல்களிலும் இவருடைய உயர்ந்த கருத்துக் குவியல்களைக் காணமுடியும். முடிவாக, தமிழ்ப் பெரியார் என்றும், தமிழ்த் தென்றல்’ என்றும், சாது முதலியார்’ என்றும் 'இராயப்பேட்டை முனிவர் என்றும் அழைக்கப்பெற்ற திரு.வி.க: அவர்களோடு பேரன்புடனும் பெரு மதிப்புட னும் நெருங்கிப் பழகி மகிழும் கேண்மை பெற்றிந்த பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், திரு.வி.க. பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்துகளுடன் இம். பணியினை நிறைவு செய்வது பொருத்தமாகும்.