பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைப்பால் உயர்ந்த அறிஞர் மு.வ.' என்ற பெயர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் அறிந்த பெயர். தோன்றிற் புகழொடு தோன்றுக’ என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஒள்ளிய உருவாய்த் தோன்றித் துலங்குபவர் நம் டாக்டர் அவர்களாவர். வடார்க்காடு மாவட்டத்திலே வாலாஜாரோடு புகைவண்டி நிலையத்திற்கு அண்மையிலுள்ள வேலம் என்னும் சிற்றுரே டாக்டர் அவர்களின் சொந்த ஊராகும் பேற்றினைப் பெற்றது. வாலாஜாபேட்டை. திருப்பத்துார் நகராண்மை உயர்நிலைப் பள்ளிகள் இவர் கல்வி பயின்ற இடங்களாகும். திருப்பத்துார் நகராண்மைக் கழக உயர் பள்ளியில் பெரும்பள்ளியிறுதி வகுப்புத் தேறினார்கள். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அப் பள்ளியில் இவர் களுடைய நிழற்படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இஃதோர் சிறப்பன்றோ? பள்ளிப் படிப்பைப் பாங்குற முடித்த டாக்டர் அவர் கள் அரசினர் அலுவலில் எழுத்தராகச் (clerk) சேர்ந்தார்கள். தமக்குத் தரப்பட்ட பணியினைச் செவ்வனே விரைவில் முடித்துவிடுவார்கள் கடமையைக் கருத்தோடு கடிதிற் செய்வதுகூட அக்காலை இவர்களுக்குப் பெருந் துன்பத்தினைத் தந்தது. இவர்கள் பணிபுரியும் திறமை இவர்களுக்கு மேலும் வேலைச் சுமையையே தேடித் தந்தது. ஞாயிற்றுக் கிழமைகளிலும், இரவிலும் ஒய்வில்லாத நிலைக்கு ஆளானார்கள். இதன் விளைவு அரசாங்கப் பணிக்கு ஒரு:கால் கடிதம் (Resignation letter)