பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று ஆனது. பிற்காலத்தில் தமிழ்த்துறையில் ஒரு பேரறிஞராகும் பேற்றினைப் பெற்ற டாக்டர் அவர்கள தம் வாழ்வினை அரசாங்கத்தில். ஓர் எளிய பணியாளராகத் தொட கினார் எனும் பொழுது வியப்பேற்படுகின்ற தன்றோ? உலகப் போர் உச்சநிலையிலே இருந்த காலம் அது. ஆதலின் அரசினர்க்கும் ஆசிரியர் பணிக்கு ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே. ஆசிரியர் பணிக்கு வருவோர் ஈராண்டுக்குப் பதிலாக ஒராண்டு பயிலுவதே சாலும் என்று அரசினர் விதிமுறையைச் சிறிது தளர்த்தினர் ஆசிரியர் பணியிலே ஆர்வமும் அக்கறையும் கொண்டிருந்த டாக்டர் அவர்கள் நல்லதொரு வாய்ப்பினை நழுவ விடாமற் பயன் படுத்திக் கொண்டார்கள்; பயிற்சி முடித்த டாக்டர் அவர்கள் பள்ளி ஆசிரியர் பணியினைப் பாங்குற-வண்ண முறச் செம்மையுற ஆற்றினார்கள். அங்கிருந்தே ஊக்கமும் ஆக்கமும் கொண்டு அயராது உழைத்து. கலங்காது. கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து 1935ஆம் ஆண்டிலே சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்விலே பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசினைப் பெற்றார்கள். தமிழுலகிற்குத் தம்மை நன்முறையில் அறிமுகப்படுத்திக் கொண்ட நல்ல தொடக்கம் இதுவாக அமைந்தது. பின்னர் டாக்டர் அவர்கள் தமிழாசிரியர் பணியினை ஏற்றார்கள். படிப்படி யாகப் பயின்று பீ.ஓ.எல். (B.O.L.) தேர்விலே முதல் வகுப்புத் தேர்ச்சி பெற்றார்கள். இவ்வளவிற்கும் டாக்டர் அவர்கள் குறிப்பிட்ட ஒரு கல்லூரியிலோ, பல்கலைக் கழகத்திலோ பயின்றவர்கள் அல்லர். தனிப்பட்ட முறை. கயிலேயே பயின்று இத்தகு நிலைக்கு வந்துள்ளார்கள்.