உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

fi , L' IT . 29 I * h யாழ்ப்பாணம் திரு. முருகேசப் பண்டிதர் அக்காலை இலக்கண இலக்கியங்களை நன்கு கற்றுத் துறைபோகிய வாாக இருந்தார். அவரிடம் தமிழ் பயின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் திரு. முருகைய முதலியாராவர். அன்னாரிடம் பாடங்கேட்கும் வாய்ப்பு டாக்டர் அவர்களுக்குக் விட்டியது. பி.ஒ எல். பட்டம் பெற்றதும் டாக்டர் அவர்கள் 1939 ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரி யாாகச் சேர்ந்தார்கள். இப் பணியினை இவர்கள் பெறுவதற்குத் துணை நின்றவர்கள் அதுகாலையில் பச்சையப்பன் அறநிலையக் குழுவிலே உறுப்பினராக விளங்கி இன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பினை அவனியெலாம் அறியச் செய்யும் துணை வேந்தர் டாக்டர் இலட்சுமணசுவாமி முதலியார் அவர்களே ஆவர். இவர்கள் தமிழாசிரியராகப் பணி வற்ற பிறகே தமிழ்ச் சிறப்பு வகுப்புக்கள், ஆனர்சு வகுப்புக்கள் முதலியனவெல்லாம் இக் கல்லூரியில் தொடங்கப்பெற்றன. காலஞ் சென்ற பேராசிரியர் மோசூர் திரு. கந்தசாமி முதலியார் அ வ ரி க ள் அதுபொழுது தமிழ்த்துறைத் தலைவராக விளங்கினார் கள அவர்கள் டாக்டர் அவர்கள்பால் நிறைந்த அணபுடையவர்கள். கல் லூரிப்பணி முடிந்த பின்னருங்கூட நீண்டநேரம் தம்மோடு இருத்தி இவர்களோடு உரை யாடிக் கொண்டிருப்பார்களாம். அவர்கள் அன்புக் கட்டளையை மீற முடியாமல் தலைக்குத் தலைப்பாகை அணிந்து, நெற்றியில் சந்தனப் பொட்டு இட்டு டாக்டர் அவர்கள் கல்லூரிக்கு வந்திருக்கின்றார்கள். தலைமைக்குச் சிறப்புக் கொடுக்கும் பண்பு டாக்டர் அவர்களிடத்தே எப்பொழுதும். பச்சையப்பன் கல்லூரி பல்வேறு துறை களிலும் இவர்கள்,முன்னேற வாய்ப்பினைத் தந்தது. அந்த