பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 இலக்கிய ஏந்தல்கள் நன்றியினை இவர்கள் இன்றுவரையில் மறந்தவர்கள் அல்லர். பச்சையப்பன் உணர்வு, இவர்கள் நெஞ்பில் கசுமையுறத் திகழ்கின்றது. பல்வேறு பொதுநலப் பணிகளுக்கிடையிலும் டாக்டl அவர்கள் முயன்று ஆராய்ச்சி செய்து வினைச் சொ களைப் பற்றியதோர் ஆராய்ச்சிக் கட்டுரையினை எழுதி எம். ஒ. எல். (M.O.L) பட்டம் பெற்றார்கள் அடுத்து, 1948 ஆம் ஆண்டிலே சங்க இலக்கியத்தில் இயற்கை, (The treatment of nature in Sangam Literature) grgör ju ஆய்வு நூலினை எழுதி டாக்டர் (Ph.D) பட்டம் பெற்றார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதன் முதலில் தமிழ்த் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் நம் டாக்டர் அவர்களே ஆவர். அத் தனிப்பட்ட சிறப்பும் யெருமையும் டாக்டர் அவர்களையே சாரும். "உழைப்பின் வாரா உறுதிகள் உள்வோ?" தமிழாசிரியர்கள் என்றவுடனே முன் காலத்தில் பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாத பண்டிதத் தமிழிலே எழுதியும் பேசியும் வந்தவர்களே நினைவிற்கு வருவர். எனவே, தமிழாசிரியர்கட்கும் பொதுமக்களுக்கும் இடையிலே ஒரு பெரிய இடைவெளி இருந்துகொண்டு வந்தது. அ ந் த இடைவெளியினை இல்லையாகச் செய்தார் நம் டாக்டர் அவர்கள். மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய எளிய இனிய அழகுத் தமிழில் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழாசிரியர்களும் மக்களிலே ஒருவர், மக்களுக்காக எழுதுபவர்கள், பேசு பவர்கள் என்கின்ற எண்ணத்தை, உணர்வினைத் தோற்றுவித்தவர்கள் இவர்களே, புது மெருகு கொடுத்துப் புதுவழியினைப் புகுத்திய பெருமைக்குரியவர்கள் இவர் களே.