На нит, 89,ቃ இதற்குமுன் வாழ்ந்த தமிழாசிரியர்களில் சிலர் ilவக்கியப் புலமையிற் சிறந்தவர்களாயிருப்பt; சிலர் பிலக்கணக் கடலுக்கு எல்லை தேர்ந்தவர்களாயிருப்பர்; சில மொழி நூற்றுறையில் முற்றுமறிந்தவர்களாயிருப்பர்; சில இலக்கியத் திறனாய்வில் தேர்ந்தவர்களாயிருப்பர்; சில இ லக் கி ய ச் சொற்பொழிவுகளாற்றுவதில் ஈடு பிணையற்றவர்களாயிருப்பர்; சிலர் இலக்கிய இன்பத்தை எடுத்து மொழிவதிலே ஏற்றம் பெற்றவர்களாயிருப்பர்; சில ஒரு சில இலக்கியங்களிலே மட்டும் ஈடுபாடு கொண்டு ைெளப்பர்; சிலர் ஒரு மொழி மட்டுமே தெரிந்து பிறமொழி இலக்கியங்களின் கீர்த்தியினை அறியமுடியாத வாாயிருப்பர்; சிலர் புதியன படைக்கும் ஆற்றல் இல்லாத வாாயிருப்பர். இவ்வாற்றல்கள் அனைத்தும் ஒருசேரப் பெற்றவர்களைக் காண்பது அரிதினும் அரிதே. எல்லாத் துறை ஆற்றலும் இணைந்து, நிறைந்த பயிற்சியும் ஆற்றலும் குறைவற அமைந்து, வளர்ந்துவரும் உலகிற்குப் புத்திலக்கியங்களைப் படைத்தளிக்கும் செம்மை சான்ற திறனும் பெற்று நிறைந்தொளிர்பவர் நம் டாக்டர் அவர்கள் ஆவர். டாக்டர் அவர்களை நான் மாணவன் என்ற நிலை யிலும், அவர்கள்.கீழே பணியாற்றிய ஆசிரியன் என்ற முறையிலும் அவர்களை நெருங்கி நன்கு அறிந்துள்ளேன். மாணவனாக நான் அறிந்த சிலவற்றை ஈண்டுக் குறிக் கின்றேன். வகுப்பறையில் டாக்டர் அவர்கள் பாடஞ் சொல்லித் தருகின்றபொழுது, மாணவர்கள், மனம் இப்படியும் அப்படியும் செல்லாத வழி ஒருமுகப்பட்டு, ஒருமனப்பட்டு விருப்புடன் கேட்பர்; பசுமரத்தாணி யெனப் பதியுஞ் சொற்களால் செஞ்சொல் விருந்தளிப் பார்கள்; கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி இஏ.-19 -
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/293
Appearance