பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«5A.turr. 299 வேண்டும் என்று எண்ணுபவர்கள் டாக்டர் அவர்கள். இவர்களுடைய எழுத்துக்கள் அற வாழ்வில் நம்பிக்கையை ஊட்டுகின்றன. ' தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்தால் போதாது; வல்லவர்களாகவும் வாழவேண்டும்" என்பது இவர்கள் கருத்து. தமிழர்தம் சமுதாயத்தினை ஒரு புதுவழியிற் கொண்டு செல்கின்றது. அவர்களுடைய வாழ்க்கையிலே-அறவழியிலே-பெருநம்பிக்கை வைத்து அவர்களுடைய வாழ்க்கையினை ஒர் வழிகாட்டியாகக் கொண்டு எண்ணற்ற இளைஞர்கள் ஆசிரியர்கள், அறிஞர் கள். மக்கள், வாழ்வும் வளமும் பெற்றுவருகிறார்கள் . -மு. வ , என்று அவர்கள் கருத்துகளைப் பின்பற்றும் ஒர் சமுதாயமே வளர்ந்து வருகின்றது. அச் சமுதாயத்திற்கு உடனடி வெற்றியில் நம்பிக்கையில்லை; மெல்ல மெல்ல ஊறி எஞ்ஞான்றும் நின்று நிலவும் வெற்றியிலேஅறத்தின் வெற்றியிலே-வள்ளுவத்திலேதான் உறுதியான நம்பிக்கை அந்த நம்பிக்கை ஒரு நாளும் வீண்போகப் போவதில்லை. டாக்டர் அவர்கள் பேச்சில் விருப்பம் செலுத்துவி தில்லை; எழுத்தே அவர்தம் பணி. அவர்கள் பேச ஒப்புக் கொள்வதில்லை என்று பலருக்கு மனக்குறை: பேச்சு உடனடி உணர்ச்சியைத் தந்து உடனடியாகவே மறைந்து விடுகிறது. எழுத்தோ என்றும் நின்று நிலவுகிறது; எதிலும் உடனடி வெற்றி அவசியம் இல்லை" என்பது டாக்டர் அவர்கள் கருத்து. டாக்டர் அவர்கள் ஒர் இயற்கை மருத்துவர்; தமக்கு நோய் வந்துற்ற காலையில் மருந்துண்ணார்கள்; இயற்கை முறையினை மேற்கொண்டு நலம் பெறுவார்கள் மற்றவர் நோய்க்கும் சில பரிகாரங்கள் கூறு வார்கள். இவ்வாறு