பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{à.ewrr. & 0 || || பிறர்வரலாறு (Biography) எழுதுவதிலே ஒரு புது முறையினைப் புகுத்தினார் டாக்டர் அவர்கள். இதனைக் காந்தியண்ணல் கவிஞர் தாகூர் ‘பச்சையப்பர் முதலிய நூல்களில் காணலாம். சங்க இலக்கியத்தில் இவர்களுக்கு நிறைந்த பயிற்சி உண்டு. அப்பயிற்சியினை நற்றிணை விருந்து, நற்றிணைச் செல்வம், குறுந்தொகை விருந்து, குறுந் தொகைச் செல்வம், நெடுந்தொகை விருந்து, நெடுந் தொகைச் செல்வம் மணல் வீடு, நடை வண்டி, தமிழ் நெஞ்சம், புலவர் கண்ணிர் முதலிய நூல்களிற் காணலாம். இலக்சியத் திறனாய்வுத் துறையில் தமக்கென ஓர் இடம் வகுத்துக் கொண்டவர்கள் டாக்டர் அவர்கள். அவர் களின் இலக்கியத்திறன்: இலக்கிய மரபு: இலக்கிய ஆராய்ச்சி முதலிய நூல்கள் திறனாய்வுத் திறம்கற்றி எழுந்தன. ஒவச் செய்தி’, ‘மாதவி’, ‘கண்ணகி" "இளங்கோவடிகள் இந்நான்கும் திறனாய்வு முறையில் மேலை நாட்டுத் திறனாய்வோடு போட்டியிடக்கூடியன. மொழியியல் தறையிலும் டாக்டர் அவர்கள் பெருந் தொண்டாற்றியுள்ளார்கள். முதற்கண் தெளிந்த முறை யிலே மொழிநூற் கருத்துகளை எழுதினார்கள். மொழி நூல்', 'மொழி வரலாறு', 'மொழிநூற் கட்டுரைகள்,' எழுத்தின் கதை', 'சொல்லின் கதை’, மொழியின் கதை' முதலிய நூல்கள் பின்வந்தோருக்கு அத்துறையில் வழி' காட்டிகளாய் அமைந்தன. சிறுகதைத் துறையில் டாக்டர் அவர்கள் வழி புரட்சி யானது; ஒரு சிறு சம்பவம். ஒரு குறிப்பிட்ட சிறு நிகழ்ச்சி இவற்றைக் கொண்டே நெஞ்சைத் தொடும் வண்ணம்உலுக்கிப் பிழியும் வண்ணம் சிறந்த சிறு கதைகளைப்