பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 303 இலக்கிய ஏந்தல்கள் படைத்திருக்கின்றார்கள். விடுதலையா? குறட்டை ஒலி இவற்றில் இவர்களுடைய கைவண்ணத்தைக் காணலாம். கடித இலக்கியத் தொடரைத் தோற்றி அதற்கு வாழ்வும் வளமும் தந்தவர்கள் இவர்களே. இவர்கள் எழுதிய "தங்கைக்கு’, 'தம்பிக்கு’, 'நண்பர்க்கு’, அன்னைக்கு ஆகிய நூல்கள் இன்று பல பத்திரிகைகளில் வரும் கடிதத் தொடருக்குத் தொடக்க விழாச் செய்தன. நல்ல நாடகங்கள் பல தமிழில் வரவேண்டும் என்பதிலே இவர்களுக்கு ஆர்வம் அதிகம் தமிழ் அத்துறை யில் இன்னும் தயங்கிய வண்ணம் உள்ளது என்பது இவர்கள் கொள்கை. எனவே. சொற்பொழிவிற்குச் செல்ல மறுக்கும் இவர்கள். நாடகத்திற்குத் தலைமை வகித்துப் பாராட்டிப் பேசவேண்டும் என்று யாரேனும் அழைத்தால் அதற்கு மட்டும் தயங்காமல் ஒப்புக்கொள் கிறார்கள். இது நாடகத் தமிழ் வளரவேண்டும் என்று இவர்கள் கொண்டுள்ள தண்டாத வேட்கையினை வெளிப் படுத்துகின்றது! மனச்சான்று’, ‘காதல் எங்கே?', 'மூன்று நாடகங்கள்’, இளங்கோ’ முதலிய நாடக நூல்கள் நாடக தமிழிற்கு இவர்கள் வழங்கிய பங்காகும். இவர்களின் நாவலான அல்லி திரு டி. கே. கணபதி என்பவரால் "டாக்டர் அல்லி என்ற தலைப்பில் நாடகமாக்கப்பட்டு நடிக்கப் பெற்றது. டாக்டர் அவர்களின் பெற்ற மனம்; தமிழிலும் தெலுங்கிலும் திரைப்படமாக வெளி வந்துள்ளது. நாட்டுப்பற்றிலும் மொழிப் பற்றிலும் டாக்டர் அவர்கள் தலையாயவர்கள். இதனை அவர்கள் நூலான "நாட்டுப்பற்று மொழிப்பற்று என்பவற்றில் காணலாம். 'அறமும் அரசியலும் அரசியல் அலைகள் கி பி. 2000 முதலியன அரசியல் தெளிவை உண்டாக்குவன. கல்வி.