பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் மு.வ.வின் நாவல்களில் குடுமப வாழ்க்கை ‘வாழ்க்கை வாழ்வதற்கே என்பர். சிலர் இப்படித் தான் வாழவேண்டும் என்று சில நெறிகளைப் பின்பற்றிக் குறிக்கோளாடு வாழ்கிறார்கள். பலர் எப்படியும் வாழ லாம் என்று மனம்போனபடி வாழ்கி றார்கள். இவ்வாறு இருதிறத் காரும் கலந்திருக்கும் சமுதாயத்தில் குடும்ப வாழ்வு குறிப்பிடத்தக்கது. சமுதாய அமைப்பின் பல்வேறு நிலைகளில் ஒருவனும் ஒருத்தியுமாக வாழும் இல்லற வாழ்வு பெருஞ்சிறப்பும் முதன்மையும் கொண்டதாகும். பழந்தமிழகத்தில் குடும்ப வாழ்வு பெரும்பாலும் அமைதி பூத்த விளங்கியது. 'பரத்தையர்ப் பிரிவு என்ற ஒன்று சங்க இலக்கியங்களிற் பேசப்பட்டாலுங்கூடக் குடும்பப் பெண்களின் வாழ்வு எளிமையும் துய்மையும் எழிலும் கற்பின் திண்மையுங்கொண்டு விளங்கியது. எனலாம். தவறாக ஒழுகிவிட்டு ஒருஞான்று தலைமகள் மாட்டு வாயிலாகப் புக்க தலைமகன் ஒருவனிடம் தலைமகள் பின்வருமாறு கூறியதாகக் காணலாம். தன்னார் துறைவன் கொடுமை தம்முள் காணிக் கரப்பா கும்மே” "காஞ்சி யூரன் கொடுமை கரந்தனன் ஆகலின் காணிய வருமே” 'அவர் நமக்கு, அன்னையும் அத்தனும் அல்லரோ புலவிய. தெவனோ அன்பிலங் கடையே"