பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B) Darr. 309 முதலியன பற்றியெல்லாம் விசாரிப்பார். கடிதங்கள் எழுதும்போதும் குடும்ப நலனைக் கேட்டு எழுதுவார். சான்றுக்கு அயல் நாட்டில் வாழும் தம் மாணவர் ஒருவருக்கு அவர் ஒருஞான்று எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு: "வாழ்கை மிகப் பெரிய கலை. இதில் தேர்தல் கடமை. வாழத் தெரிந்தவர்களாக விளங்குதலே சமுதாயத்திற்கு நலம் செய்யத்தக்க நல்ல தொண்டு. எப்படி. எனின், நம்மைப் பார்த்துப் பிறர் கற்குமாறு. நாம் ஒரு நூலாகப் பயன்படுவோம்",7 "நெடுநேரம் வேறு வேலைகளை மேற்கொண்டு வெளியில் இருக்க வேண்டா, குடும்பத்தில் தங்கியிருக்கும் நேரம் இந்தச் சில மாதங்களில் மிக வேண்டும். திரு. வசந்தாவுக்கு வேலைகள் பெருகாதவாறு உதவி செய்க. குந்தவையின் மகிழ்ச்சியே எனக்குப் பெருவிருந் தாக இருந்தது உமாவின் டுவிஸ்ட் நடனமும், குந்தவை யின் கரவற்ற சிரிப்பும் நினைந்து மகிழ்கிறேன் இருவரும் தம்பியுடன் கொஞ்சுகிறார்களா...' "இங்கு எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். புகழேந்தி துடுக்கு மிகுந்தவனாக மாறி வருகிறான். அடுத்த ஜூனில் ப ஸ் வரி க் கு ச் செல்வான். நம்பி எம்.பி.பி.எஸ். முடித்து விட்டான். காரி முதலாண்டு எழுதியுள்ளான்." m இதுகொண்டு பிறர் குடும்ப வாழ்வில் அவர் காட்டிய அக்கரையும் விளங்கும். புதினங்களின் கருப்பொருள் தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் எழுதிய எழுத்து களிலும் அவர் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பிட்டு எழுதாத புதினம் இல்லை எனலாம். குடும்ப வாழ்க்கையின் @・@rー20