பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3互0 இலக்கிய ஏந்தல்கள் சிக்கல்களே அவர் எழுதிய பெரும்பாலான புதினங்களின் கருப்பொருளாயின. அவற்றினைப் படிக்கும் மக்கள் குறிப்பாகக் கணவன் மனைவியர் தம் வாழ்க்கையைத் திருத்திக் கொண்டனர். அவருடைய கள்ளோ காவியமோ என்னும் பு தி ன த் ைத ப் பிடித்துவிட்டுக் கணவன் மனைவியர் பலர் அவருக்குத் தம் வாழ்க்கை அவர்தம் நூலால் சீர்ப்பட்டதைக் குறிப்பிட்டு எழுதி நன்றி தெரிவித் துள்ளனர். அகல் விளக்கு என்னும் புதினத்தைப் படித்துவிட்டு, ஆதில் வரும் சந்திரன்’ வாழ்க்கைக்காகக் கலங்கியவர் களும் இரங்கியவர்களும் பலராவ்ர். நெஞ்சில் ஒரு முள்'ளில் வடிவின் வாழ்வு குறித்து இரக்கம் செலுத்தி யவர் எண்ணற்றவராவர். வாடாமலரில் தானப்பனும் அவன் மனைவியும் தம் குடும்ப வாழ்வை அல்லலுக்குரிதாக ஆக்கிக்கொண்டு இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மடிவதனையும், மலர் விழி'யில் கலெக்டர் செல்வநாயகம் வாழ்வு, வாய்த்த மனைவி காரணமாகப் பட்டுப்போவதை யும்,கரித்துண்டில் ஒவியர் மோகனின் வாழ்வு நிர்மலாவின் துரோகத்தால் நசிந்து போவதனையும் முறையே காட்ட லாம். அமைதிக்குலைவு - இன்று அரசியல், பொருளாதார நெருக்கடிகள் சமுதாயத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. பழங்காலச் சமுதாயத்தில் இருந்த அமைதி, ஏன்? சென்ற தலைமுறை யில் குடும்ப வாழ்வில் காணப்பட்ட அமைதி கூட இந்தத் தலைமுறையில் கிஞ்சித்தும் காணமுடியவில்லை. பெண்ணுரிமையும், பெண்களுக்கு வாக்குரிமையும், சொத்துரிமையும், உயர்கல்வியும், வேலை வாய்ப்பும் ஆண்