Негат. 3.11 ாளுக்கு வாய்ப்பது போலவே ஏற்பட்டுப் கோனபிறகு பெண்கள் பொதுவிடங்களில், பொதுவாழ்வில், பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்வது அதிகமாகிக் கொண்டு வருவதனால் குடும்ப இன்பமும், அமைதியும் பெருமளவு கெட்டுக்கொண்டு வரக் காண்கிறோம். "வினையே ஆடவர்க் குயிரே வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்' என்ற பாடலை பாடிய பெருங்கடுங்கோவின் மொழியும், "மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி" என்ற குறள்மொழியும் ஈண்டு ஆழ்ந்து உன்னத்தக்கது. பலவகை வாழ்க்கை இன்று பலருடைய குடும்ப வாழ்க்கை சீர்ப்பட அமையாமைக்குக் காரணம் மனம் பொருந்தாமையே. பொருத்தமான வாழ்க்கைத் துணை வந்து வாய்க்காத காரணத்தால் ஆண்கள் பலரின் வாழ்வு மனம் முறிந்து திசை திரும்பி விடுகிறது. நல்ல கணவர் வாய்க்காமற் போவதனால் பெண்கள் பலரின் வாழ்வு கொடுமைக்கு ஆளாகி சீர்கெட்டுச் சிதைந்து நிற்கிறது. பல குடும்பங் களில் ஏதோ வாழ வேண்டுமே என்கிற காரணத்திற்காக வாழ்ந்து தொலைக்கிறார்கள். ஆனால், பெரும்பாலான குடும்பங்களுக்கிடையில் ஒரு சில குடும்பங்களின் வாழ்க்கை அமைதியாகத் தெளிந்த நீரோடை போன்று செல்கிறது. இவ்வாறு வாழும் குடும்பங்களின் மேல் மு.வ. அவர் களுக்குத் தனிப்பற்று உண்டு தம் வாழ்வில் பல தரப்பட்ட குடும்பங்களைக் கண்டு பழகித் தெளிந்து தேர்ந்த மு.வ. அவர்கள் தாம் கண்ட உண்மைகளைத் தம் படைப்புகளில்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/311
Appearance