உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Нашт, - 3 : 5 வேளையில் வருவதும் உண்டு. அப்போதும் அவள் முகம் உம்மென்று இருக்கும். தோழியரோடு பேசிய பேச்சின் பொது இருந்த மலர்ச்சி இருக்காது. சில நாட்களில் அவளே என்னைத் தேடி வந்தாலும், ஏதாவது குறை சொல்லவே வருவாள்." 'வீட்டிலே இவள் ஒருத்தி எனக்குத் துணையாக இருந்து ஊக்கம் கொடுத்திருந்தால் ஊரார் எவ்வளவு வெறுத்தாலும் பழித்தாலும் அவற்றைத் தாங்கும் மனவலிமை எ ன க் கு ஏற்பட்டிருக்கும். இந்த அடிப்படையே எனக்கு இல்லாதபோது நான் எப்படி வெளியே தலைகாட்ட முடியும்?" “என்னிடம் அன்பு செலுத்தக் கடமைப்பட்ட என் மனைவி என் வாழ்க்கைக்குத் துணை என்று வந்த ஒருத்தியின் தீமையை எண்ணுவதற்கும் நோவதற்கும் எவ்வளவு வலிமை வேண்டும்; எண்ணி எண்ணி கொங்தேன்; நொந்து கொந்து வெந்தேன்" "எங்கே யாரும் இல்லையோ? குடி இல்லாத வீடு போல் இருக்கிறதே" என்று கேட்டேன். "ஆமாம் யாரும் இல்லை. தாய் வீட்டுக்குவழக்கம்போல்." 'வழக்கம்போல் என்றால்..." 'ஏதாவது போராட்டம். புத்தியில்லாத மிருகத்தைக் கட்டிக்கொண்டு என்ன செய்வது?" அவனோ மனைவியின் மனம் அறிந்து நடக்கத் தெரியாதவன். நானோ என் மனம் அறிந்து நடக்கத் தெரியாத மனைவியை உடையவன். நான் அவனிடம்