பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 317 அங்கு மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் இடமில்லாமல் போய் விடும் என்ற கருத்து டாக்டர் மு.வ. அவர்கள் புதினப் பாத்திரம் ஒன்றின் கூற்றால் விளங்குகின்றது; "பெரிய வீட்டுக் கதைகள் எனக்கு எவ்வளோ தெரியும் அன்பாக இருப்பது எல்லாம் என்வீடு உன் வீடு போல ஏழை வீடுகளில் தான். நம்ம வீடுகளில் பொன்னும் பொருளும் செல்வமும் இல்லை. அதனால் அன்பைக் கொடுத்தே அன்பை வளர்க்கவேண்டி இருக்கிறது. இவர்களுக்கு அப்படி இல்லை. பொன்னையும் பொருளையும் கொடுத்து இ வ ர் க ள் அன்பை வளர்ப்பார்கள் வேளைக்கு மூன்று முறுக்கு முறுக்குவாள். என் பெண் டாட்டி. வாரத்துக்கு நாலு சண்டை இழுப்பாள். ஆனாலும் நான் நோயாகப்படுத்தால் வாயைக்கட்டி வயிற்றைக் கட்டியாவது, பிச்சை எடுத்தானது என்னைக் காப்பாற்றுவாள். ஏழைகளின் அன்பு என்றைக்கும் மாறாது." "கணவன்-மனைவி, பெற்றோர், மக்கள், மாணவர்ஆசிரியர், ஆள்வோர்-ஆளப்படுவோர் இவர்களிடையே ஒருவர்க்கு ஒருவர் நம்பிக்கை இல்லாத அடிப்படையில் தான் இன்றைய சமுதாயம் அமைந்திருக்கிறது" என்று டாக்டர் மு.வ. சமுதாய அமைப்பின் இன்றைய சீரழிந்த நிலையைக் குறிப்பிடுவதோடு நில்லாமல் சமுதாய மருத்து வரான காரணத்தால் நல்ல இம்வாழ்க்கையைப் பின் வருமாறு நயம்பட உரைக்கிறார். "ஒழுங்கான வாழ்க்கை உள்ள வீடுகளில்தான் அன்பு ஆட்சி செய்யும். அன்புதான் நல்ல மனத்தை வளர்க்க முடியும், நீர்வளம் இல்லாவிட்டால் பயிர்களுக்கு இயல் பான வளர்ச்சி இருக்க முடியாது. அன்பான சூழ்நிலை