பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 இலக்கிய ஏந்தல்கள் இல்லாவிட்டால் மனத்திற்கு இயல்பான வளர்ச்சி இருக்க முடியாது." " "அன்பு நிரம்பிய இல்வாழ்க்கையில் கணவன் மனைவி யிடத்தில் செலுத்தும் அன்புக்கும் மனைவி கணவனிடத் தில் செலுத்தும் அன்புக்கும் ஈடு இல்லை. மனைவி கணவனுடைய இன்ப துன்பங்களையே தன் இன்ப துன்பங்களாக உ ண ர் கி றா ள். கணவனுக்காகவே வாழ்கிறாள். அவனுடைய கண்ணிரால் கலங்குகிறாள்.'" திருமண முறைகள் குடும்ப வாழ்வு திருமணத்தில் தொடங்குகிறது" எனவே திருமணங்கள் எந்த அடிப்படையில் நிகழ வேண்டும் என்பது குறித்துச் சீரிய கருத்துகளை மு.வ. பல விடங்களில் குறிப்பிட்டுள்ளார்: "பழங்காலத்துத் திருமண இணைப்பு, ஒரே பெரிய மரத்தின் இரண்டு கிளைகளை ஒட்டி இணைப்பது போன்றது. இக்காலத்துத் திருமண இணைப்பு இரண்டு வெவ்வேறு மரத்தின் இரண்டு கிளைகளை ஒட்டி இணைப்பது போன்றது." - உறவுத் திருமணம் உறவுக்குள் அமையும் திருமணம் பற்றி மு.வ. கருதும் கருத்து பாவை’ எனும் புதினத்தில் பழநியப்பன்' வாயிலாக வெளிப்படக் காணலாம். "குடும்பங்களில் இப்படியெல்லாம் உறவுக்காக கட்டிக் கட்டி கணவனுக்கும் மனைவிக்கும் அன்பே இல்லாமல் போய்விட்டது. பேருக்குக் குடும்பம் என்று ஏற்படுத்தி விட்டுக் கோமாளிக்கூத்தாக இருந்தால் என்ன பயன்? நம்