பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 319 ஊர்வரைக்கும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை வீடுகளில் கணவனுக்கும் மனைவிக்கும் அன்பு இருக்கிறது? ஏதோ அருமையாக அங்கொரு குடும்பம், இங்கொரு குடும்பம்; அவ்வளவுதானே! இப்படி வாழ்க்கையில் உண்மை அன்பும் ஊக்கமும் இல்லாதவர்களுக்குப் பிறக்கிற குழந்தைகள் வீரமாக வளர முடியுமா? வீரராக வாழ முடியுமா? குடும்பங்கள் நன்றாக இல்லாத காரணத்தால் தானே நாடே கெட்டுவிட்டது." - வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முறை வாழ்க்கைத்துணை அமைவது என்பது ஒரு பெரும் வேறு. திருவள்ளுவர், "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை" என்று வாழ்க்கைத்துணையின்-இல்லாளின் இன்றியமை யாமையினை எடுத்தோதினார். ஐவகைப் பெண்கள் பெண்களை ஐந்து வகையினராக மு.வி. கான் இன்றார். "பழங்காலத்துத் தமிழ்ப்பெண்கள் போல் குடும்பமே உலகமாய்க் கணவனே தெய்வமாய் அடக்கத்தோடு வாழும் பெண்கள் சமையலறையிலும் குழந்தைத் தொட்டிலிலும் தங்கள் இன்பத்தொழிலைக் காண்பவர் கள், முதல்வகை. "படிப்புக்கு ஏற்ற தொழில் வேண்டும் என்று தேடி, குடும்பத்தில் பாதிவாழ்வும். தொழில் செய்யும் இடத்தில் பாதிவாழ்வும் வாழ்கிறவர்கள்; ஆனால் மனத்தில் பழங்