பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 இலக்கிய ஏந்தல்கள் இதே மனைவியைப் பற்றிப் பின்னால் மருதப்பன் குறிப்பிடுவது பின்வருமாறு "என்னைவிடக் காதல் குறைந்தவள் என்று அவளை எண்ணியிருந்தேன். அது தவறுதான். அன்று காலையில் இருந்து மாலைவரைக்கும் முப்பது முறை என்னிடம் வந்தாள். முப்பது முறை மேசைமேல் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றாள். இரண்டு முறைதான் 'போய்விட்டு வரட்டுமா என்றாள். சமையலறையில் இருக்கும்போது அடிக்கடி அதைவிட்டு என்னுடைய அறையை நோக்கி வந்துவந்து போனாள். ஒருவாரம் பிரிந்திருக்கப் போகிறோம் என்ற உணர்வு அவளை அப்படி அலைத் திருக்கிறது. வாயில் சொல்ல முடியாத உணர்வு மிகுதி தான் காரணம்." "தாய் வீட்டிலிருந்து வரும்போது கண்ணிர் கலங்கி அழுது வருவாள்; அடி பைத்தியமே என்று சொல்லித் திட்டிக்கொண்டு அழைத்து வருவேன். இங்கிருந்து தாய் விட்டுக்குப் போவதென்றால் ஆனந்தமாய்ப் புறப்படுவாள். இப்போது ஏடு திரும்பி விட்டது. அங்கிருந்து வரும்போது ஆனந்தமாக வருகிறாள். இங்கிருந்து போகும்போது கலங்குகிறாள்; என்னையும் கலங்க வைக்கிறாள்" குடும்பங்கள் பல இக்காலத்தே அவல வாழ்வில் அமிழ்ந்து கிடப்பதனை மு.வ. செந்தாமரை”யில் மருதப்பன் பாத்திரத்தின் வாயிலாகப் பின்வருமாறு தெரிவிக்கிறார். "எதிர்காலத்தில் வாழ்க்கையே யந்திரமாக மாறி விடுமோ? எல்லாம் சூளைதானா? வாய்க்கு எவ்வளவு சுவைகொடுத்தாலும் ஒட்டல் வாழ்க்கை மனத்திற்குச் கவையாக இல்லையே! காதல் இல்லாத குடும்பங்களும்