பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H.nir. 32.3 இப்படித்தானோ உடம்பு என்னும் அளவில் இன்பமும் உள்ளம் என்னும் அளவில் துன்பமும் இருக்குமோ."ை எனவே ஆண் திருமணத்தில் ஒரு பெண்ணைத் தெரிந்தெடுக்க வேண்டுமென்றால் என்ன முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பலவிடங் அளில் பல பாத்திரங்களில் கூறியிருக்கக் காணலாம். இரு சாதிகள் முதலாவதாக அல்லி என்னும் புதினத்தில் ஒரு புதுமையான கருத்தினை வெளியிடுகின்றார். கலப்பு மணத்தை ஆதரிக்கும் மு.வ. அவர்கள் ஒரு புதுமையான கலப்பு மணத்தை வன்மையாக எதிர்க்கிறார். பிறப்பால் அமைந்த சாதிப்பாகுபாட்டைக் கருதாமல், மனத்தால், பண்பால், வாழும் வகையால் வந்தமைந்த வாழ்க்கை நெறியினைக் கொண்டு மனிதச் சாதியை இரு பிரிவு களாகப் பிரித்துக்காண்கிறார். அதுதான் எப்படியாவது வாழவேண்டும் என்று நெறியற்று, குறிக்கோளற்று மனம் போனபடி வாழும் வாழ்க்கையினர் ஒரு சாதி; நல்ல நோக்கமும் குறிக்கோளும்.கொண்டு அறத்தில் பற்றுவைத்து இப்படித்தான வாழவேண்டுமென்று வாழ்பவர் பிறிதொரு சாதி. மனிதன் படைத்துக்கொண்ட சாதிகளுக் கிடையே கலப்புமணம் நடைபெறுவதனை வரவேற்கும் மு.வ., இந்த இருவகை-எப்படியாவது வாழ வேண்டும்-இப்படித் தான் வாழ வேண்டும்-என்ற இருவகைப் போக்கினர்க்கு இடையில் ஒருநாளும் எந்தக் காரணத்தைக்கொண்டும் கலப்பு மணம் நிகழக்கூடாது என்று வற்புறுத்திக் கூறுகிறார் : "உன் சாதிப் பெண்ணாகப் பார்த்து மணந்துகொள். முதலில் நீ என்ன சாதி என்று எண்ணிப்பார். இப்படித் தான் வாழ வேண்டும் என்ற சாதியா. எப்படியாவது