பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324, இலக்கிய ஏந்தல்கள் வாழ வேண்டும் என்ற சாதியா என்று தெரிந்துகொள். பிறகு அதே சாதியான பெண்ணைத்தேடு' என்று அறிவுரை கூறுகிறார். மேலும் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது குறித்துக் ‘கரித்துண்டு’ என்னும் புதினத்திலும் பின்வருமாறு கூறியுள்ளார் : "நல்ல ஒவியக் கலைஞனைத் தேடும்போது, அவனுக்கு நல்ல கண் பார்வை இருக்கிறதா என்றே ஆராய வேண்டும். செவிநுட்பம் பெற்ற ஒரு குருடனை ஒவியக்கலைக்குத் தேர்ந்தெடுக்க முடியுமா? இசைக்கலைக்குக் கண்பார்வை கட்டாயம் அல்ல. ஆனால் செவிநுட்பம் கட்டாயம் வேண்டும். அதுபோல்தான் இல்வாழ்க்கையும். ஒருநாள் இரண்டு நாள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து குலாவுகிற உறவுக்கு-விபசார நட்புக்கு-அழகு கட்டாயம்வேண்டும். ஆனால் வாழ்நாள் முழுதும் பழகும் வாழ்க்கைத்துணைக்கு அன்புதான் முதலில் வேண்டியது'." இதுபோன்றே பாவையில் வரும் பழநியப்பன் தனக்கு வாய்க்கவேண்டிய வாழ்க்கைத்துணை பற்றிக் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகின்றான். "நான் வாழும் வாழ்வுக்கு ஒரு நல்ல துணைவேண்டும் நான் பேசும்பேச்சைக் கேட்பதற்கு ஒரு நட்பு வேண்டும். நான் எண்ணுவதுபோல் சேர்ந்து எண்ணுவதற்கு ஒரு மனம் வேண்டும். அதனால்தான் நான் பாவையைத் தேடுகிறேன். அவர்களைப்போல் ஒருத்தியை விரும்பி ஒருத்திக்குத் துரோகம் செய்ய என்னால் முடியாது இவ் வளவுதான் நான் சொல்ல முடியும். என்னை வற்புறுத்த வேண்டாம், நீங்கள் எல்லோரும் இப்படிப் பேசி என் தாயின் மனத்தை மாற்றாமல் இருந்தால் போதும் அதுதான் நான் உங்களைக் கேட்டுக் கொள்வது"."