பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 இலக்கிய ஏந்தல்கள் மூவகை வாழ்வுப்போக்கு குடும்ப வாழ்வின் போக்கில் மூவகைப் போக்குகளை மு.வ. காண்கிறார். எடுத்துக்காட்டான வாழ்வு நடத்தும் கணவர் மனைவியர். இரண்டாவதாக, பகட்டிலும், செல்வ நாட்டத்திலும், ஆரவாரப் போக்கிலும் அமிழ்ந்து தங்களைத் தாங்களே அ ழி த் து க் .ெ க | ள் ளும் கணவன் மனைவியர். மூன்றாவதாக ஏதோ திருமணம் நடந்தது, சற்றுப் போராட்டம் இருந்தாலும் வாழ்ந்து முடிய வேண்டும் என்று கடமைக்காக வாழும் கணவன் மனைவியர். இனி, இம்மூவகை நிலையினரைச் சிறிது விரிவாகக் காண்போம். எடுத்துக்காட்டான கணவன், மனைவியர் பொதுவில் கணவன் மனைவியரில் மனைவியர் அன்பும் பண்பும் கடமையுணர்வும் பொருந்தியவராக இருத்தல் இயற்கை. பெரும்பாலும் கணவன்மார் மனைவிமார்களை நோக்க ஏதோ சிற்சிலவிடங்களில்தான் பண்புமிக்கவர்களாகக் காணமுடியும். தமிழ்நாட்டு மகளிரின் தனிச் சிறப்பான பண்பாடே குடும்பம் காக்கும் கடமை உணர்வாகும். கொண்ட கொழுநனை நன்கு ஒம்பி, பெற்ற பிள்ளைகளைப் பேணி வளர்த்து வாழும் பெருந் தியாக வாழ்வு பெண்ணுடையது. அத்தகைய பெண் மனைவியாக வாய்த்தால் அந்தக் குடும்பம் அன்பும் அமைதியும் பூத்துக்குலுங்கும் திருவிடமாகப் போய்விடும். பெண்ணின் பண்பு ஆணையும் திருத்தி நெறிப்படுத்தும் தூய்மை மிக்கது. இத்தகைய அன்புடையோர் வாழ்க்கை யினை வேலு என்ற பாத்திரத்தின் வாயிலாகப் பின் வருமாறு மு.வ. குறிப்பிடுகின்றார்.