பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Й.urr. 327 "காதல் மனைவியிடம்தான் மனிதன் சிறுபிள்ளையாக நடந்து கொள்கிறான். மூப்பு என்பதை உடல் கண்டாலும் உள்ளம் காணாத உலகம் அந்தக் காதல் உலகம் ஒன்று தானே? அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் வயது அறுபதைக் கடந்தாலும் உள்ளம் இருபதைக் கடப்பதே இல்லை; பத்தைக் கடப்பதும் இல்லை எனலாம்." நல்ல மனைவி நடந்துகொள்ளக்கூடிய முறைகளைப் பின்வருமாறு தம் புதினத்தில் வரும் பெண்கள் கூற்றாகவே கூறக் காணலாம்: "கணவன் என்றால் உலகத்தில் பெறமுடியாத பெருஞ்செல்வம் என்பதும், அந்தக் கணவனுக்காக எந்தத் துன்பத்தையும் பொறுத்துத்தான் வாழவேண்டும் என்பதும், அவள் வழிவழியாகப் பெற்ற குடும்ப அறிவு." வெற்றிகரமான வாழ்க்கை வெற்றி நிறைந்த வாழ்வைப் பெற்ற சுடர்விழி, தன் குடும்ப வாழ்வு வெற்றி பெற்றதன் காரணத்தைப் பின் வருமாறு சொல்கிறார்: "திருமணமான பிறகு கணவரின் விருப்பப்படி நடக்கிறேன். அதனால் வாழ்க்கை அமைதியாக நடக்கிறது. நீங்கள் கற்றுக்கொடுத்தவழிதான். ஒருவர் விருப்பப்படி என்றால் வாழ்க்கை நன்றாக நடக்கிறது. இருவர் விருப்பம் என்றால் இரண்டு வழி ஆகிறது. போராட்டம் ஆகிறது. நல்லதோ கெட்டதோ அவர் விருப்பப்படி நடக்கட்டும் என்று இருக்கிறேன். அவர் படித்தவர். தெரிந்தவர். உலகம் அறிந்தவர். உலகத் திற்குக் கற்டுப்பட்டவர். நான் வீட்டோடு வாழ வேண்டியவள். அதனால் அவர் விருப்பம்தான் பெரிது. அதை உணர்ந்து நடக்கிறேன். ஒரு துன்பமும் இல்லை."