பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö25 இலக்கிய ஏந்தல்கள் கணவன் மனைவி வாழவேண்டிய வழி 'வாடாமலர்' என்னும் தாம் இறுதியாக எழுதிய புதினத்தில் கணவன் மனைவியர் எவ்வாறு வாழவேண்டும் என்பதனைப் பின்வரும் உரையாடல்களிலிருந்து தேர்ந்து தெளியலாம்: "கணவன் மனைவி இருவரும் தனித்தனியே இரண்டு வழியில் நடப்பது நல்லதா? அல்லது ஒரே வழியில் ஒருவர் முன்னே செல்ல, மற்றொருவர் அந்த வழியில் பின்பற்றி நடப்பது நல்லதா? என்று கேட்டாள்" "ஏது? பெரிய தத்துவம் பேசத் தொடங்கி விட்டாயே" என்றேன். "இருக்கட்டும். சொல்லுங்கள்" என்றாள். "ஒரே வழியில் நடப்பதுதான் நல்லது ஆனால் யார் முன்னே நடப்பது என்பதுதான் தெரிய வில்லை,” "உங்களுக்கா தெரியாது? வேண்டும் என்றே என்னை மருட்டுகிறீர்கள்," "முன்னே மனைவி நடக்க, பின்னே கணவன் நடந்தால் என்ன?" "நடக்கலாம். ஆனால் மனைவிக்கு ஊர், உலகம், சுற்றுப்புறம் எல்லாம் தெரிந்து, எல்லாருடனும் பழகி வாழ்க்கை நடத்தத் தெரிந்திருக்க வேண்டும். கணவன் வீட்டோடு இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். அப்படி இருந்தால் அது சரிதான்" என்றாள். "என் கணவரிடமும் முதலில் பயம் இருந்தது, இப்போது அன்புதான் இருக்கிறது. அன்பினால் அடங்கி