330 இலக்கிய ஏந்தல்கள் குறைந்த வருவாயில், நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தோம். பணம் நிறைந்த வாழ்க்கை இல்லையானாலும் மனம் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தோம். போதும்." மோகன்-பொன்னி வாழ்வு + காதலில் தோல்வியுற்ற வங்காள ஒவியர் மோகனும், அவர் பிற்கால வாழ்வில் இடம்பெற்ற ஏழைப் பெண் பொன்னியும் வாழ்ந்த வாழ்வைப்பற்றி மோகனே பின்வருமாறு கூறக் கேட்கலாம் : "என் சின்ன உலகத்தில் வீண் பேச்சு இல்லை; போலி உறவு இல்லை; உதடுகள் அசைந்தால் உள்ளமும் அசைகின்ற உலகம் எங்கள் உலகம். கண்ணிர் கலங் கினால் கருத்தும் கலங்குகின்ற உலகம் எங்கள் உலகம். போதும் எனக்கு இந்தச் சின்ன உலகம் இங்கே என் வாழ்க்கைக்கு வேண்டிய ஆறுதல் உள்ளது. இன்பம் உள்ளது. என் கூடு அவள் வாழும் குடிசை. விட்டுப் பறந்தால் இருவரும் ஒன்றாகவே பறப்போம். புகுந்தால் ஒன்றாகவே புகுவோம். சின்னக் கூடுதான். ஆனால் சமூகத்தில் மதிப்பு மானம் என்னும் தட்ப வெப்பக் கொடுமைகள் தாக்காத வலிய அரண் இது. போதும் எனக்கு g)gg.**al ‘மண்குடிசை என்னும் புதினத்தில் பேராசிரியர் கூற்றாக அவர் தம் மனைவியோடு நடாத்திய குடும்ப வாழ்க்கை பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார் : 'எனக்கும் என் மனைவிக்கும் எத்தனையோ நாள் பிணக்கு, கசப்பு உண்டு. ஆனால் மூன்று நாள் என்னைப் பிரிந்திருக்க அவளால் முடியாது. நான் இல்லை என்றால் வயிறாரச் சாப்பிடவும் மு. டி. ய ர து. எனக்காகவே வாழ்ந்தாள். என்னையே .ெ த ய் வ. மா. க எண்ணி
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/330
Appearance