உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. Larr. 3.31 வாழ்ந்தாள். என் பக்கத்தில் இருந்தே கடைசி மூச்சையும் விட்டாள். இந்தப் பிணக்கு கசப்பு இவைகள் எல்லாம் என்ன செய்யும்? கணவன் மனைவி என்றால் எதுவும் பிரிக்கமுடியாது. எமன் தவிர யாரும் பிரிக்க முடியாது." குடும்ப நலனே நம் நலன் என என்னும் பெற்றியர்: ‘கரித்துண்டு புதினத்தில் திருவேங்கடம் தன் மனைவி யைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார் : "ஒரு நாள் தவறாமல் சமையலறையில் செய்த வேலையையே சலிக்காமல் செய்துகொண்டு, நான்கு மக்களையும் சீர்ப்படுத்திக் காப்பாற்றி, மற்ற வீட்டு வேலைகளையும் விடாமல் செய்து, நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பும் எனக்காகக் கண்விழித்து உணவிட்டு, எல்லாப் பொறுப்பையும் சுமந்துவரும் அவளுடைய உழைப்பையும் துன்பத்தையும் நினைந்தேன்." "எவ்வளவோ பொறுப்பையும் துன்பத்தையும் தன்னந்தனியாக குடும்பமே தானாக ஏற்றுக்கொண்டு என்னை ஒய்வு நிறைந்தவனாக விட்டிருக்கிறாளே என்று எண்ணியபோது, என் நெஞ்சில் அன்புகலந்த நன்றி யுணர்ச்சி நிறைந்தது"." f மேலும் அவர் தம் மனைவியோடு பேசும் பேச்சில் சிறந்த வாழ்வியல் உண்மைகள் அடங்கியிருக்கக் காணலாம். அது வருமாறு : 'குடும்பப்பொறுப்பினைக் குறைவறக் கவனிக்கும் மனைவியர் : வாரத்தில் ஆறுநாள் என் விருப்பம்போல் விட்டு விடு. ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் உன் விருப்பம்போல் சொன்னபடி நடக்கிறேன். அன்று ஒரு நாள் மட்டும் நானே சமையல் செய்வேன்; நானே குழந்