பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 இலக்கிய ஏந்தல்கள் தைக்குப் பல் துலக்குவேன்; குளிக்கச் செய்வேன்; உடை உடுத்துவேன்; எண்ணெய் இட்டுத் தலை வாருவேன்; உணவு இடுவேன்; உறங்கவைப்:ேன் கடைக்குப்போவேன் வைத்தியரிடம் அழைத்துப்போய் மருந்து வாங்கித் தருவேன்; வருவோர் போவார்க்குக் காப்பிவைத்துத் தருவேன். தோய்த்து உலர்ந்த துணிகளை மடித்து வைப் பேன். வரவு செலவு கணக்கு எழுதுவேன்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். "சரி...சரி...எழுந்திருங்கள். குடித்தனம் ஆனாற் போல்தான். ஒரு வாரத்துச் செலவையும் ஒரே நாளில் செய்து விடுவீர்கள். ஆறு நாள் அடுப்பில் பூனை துரங்கும் படியாகச் செய்வீர்கள்' என்று சொல்லிக்கொண்டே சமையலறையை நோக்கிச் சென்று விட்டாள்". " "மலர் விழி’ புதினத்தில் செல்வ நாயகம் பற்றி மலர் விழி குறிப்பிடும் செய்தியிலும் இந்த உண்மையினைக் காணலாம்: "அவர் சம்பளம் முதலிய எதிலும் தலையிட்டதே இல்லை. முதலிலிருந்தே அப்படி நடந்துகொண்டார். அது நல்லதுதான். வீ ட் டு க் கு வருகிற இளைஞர்களுக்கும் அதே அறிவுரையைத்தான் சொல்லு வார். மனைவியிடத்தில் சம்பளத்தைக் கொடுத்து விடு கணக்கு எழுதிவைத்துச் செலவு செய்யச் சொல்' என்று திருமணமாகி வாழ்த்துப் பெற வந்தவர்கள் பலருக்கு அவர் அறிவுரை சொல்லியதைக் கேட்டிருக்கிறேன்." நல்ல மனைவி கரிந்துண்டில் வரும் திருவேங்கடம்.தன் மனைவியைப் பற்றி ஆராய்ந்து அளந்து கூறும் கூற்றில் வளமான வாழ்க்கைத் தத்துவம் அடங்கியிருக்கக் காணலாம் ;