b).rum. 33.3 'உங்கள் எதிர்கால மனைவியரிடம் குற்றம் கானும் போது குணத்தையும் காணுங்கள். மிகை நாடி மிக்க கொள்ளுங்கள்" என்று ஆசிரியர் சொன்னது, தக்க சமயத் தில் வந்து காத்தது. வழியறிந்து சிக்கனம், துன்பம் வந்தபோது உருகிக் கண்ணிர் விட்டு ஆதரவு தருதல், உறுதியான கற்பு, உலகியல் நடைமுறை, நல்ல வழக்கங்களை விடாமை, கட்டான உடலழகு, கணவனுடைய உயர்வையும் முன்னேற்றத்தையுமே நாடுதல். இத்தகைய நல்ல பண்புகள் நினைவுக்கு வந்தன"." இவ்வாறு ஒத்த பண்பும் உயர் வாழ்வுங்கொண்ட கணவன்-மனைவியர் பற்றி மேற்காணும் செய்திகளைக் காண்கிறோம். ஆடம்பர மோகங் கொண்ட மனைவியர் பொதுவாகப் பெண்களுக்கு நகை, புடைவைகள், கார், பங்களாக்கள், சொகுசான வாழ்வு இவற்றில் வேட்கை மிகுதி; எளிமைப் பற்றும் ஆடம்பர வெறுப்புங் கொண்ட பெண்கள் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர். 'பாவை என்னும் புதினத்தில் கண்ணப்பர் கூற்றாக வரும் பின்வரும் வரிகள் எண்ணத்தக்கன. "சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பட்டாடை உடுத்திப் பகட்டாகத் திரிகின்றார்கள் அவளும் அப்படித் திரிய விரும்புகிறாள்; நானோ நூலாடை உடுத்து அழகாக விளங்கலாம் என்கின்றேன், அதற்காக வருந்துகின்றாள். சுற்றுப்புறத்தில் உள்ள வர்கள் கழுத்தொடியக் கைநோகப் பொன்நகைகள்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/333
Appearance