பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 இலக்கிய ஏந்தல்கள் சுமந்து இறுமாக்கின்றார்கள். தானும் அப்படி இறு மாக்க விரும்புகின்றாள். நானோ அழகைக் காக்கும் எளிய சில நகைகள் போதும் என்கின்றேன். அதற் காக வருந்துகின்றாள். சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் வம்பும் துன்புமான பேச் செல்லாம் பேசிப் பொழு தெல்லாம் போக்கி வாழ்நாளைக் கழிக்கின்றார்கள். தானும் அப்படிக் கழிக்க விரும்புகின்றாள். நானோ பாட்டிலும் படிப்பிலும் அறிவெல்லாம் செலுத்திக் கலையெல்லாம் கற்று இன்புறலாம் என்கின்றேன்; அதற்காக வருந்துகின்றாள். கற்றுப்புறத்தில் உள்ள வர்கள் சடங்கும் சாத்திரமும் பெருக்கி ஒருவரிலும் ஒருவர் மதிப்பை மிகுதியாகப் பெற ஆடம்பரமாக வாழ்கின்றார்கள். தானும் இவ்வாறு வாழ விரும்பு கிறாள். நானே அன்பும் அறமும் வளர்த்துஎல்லோரும் பொது என்றெண்ணி எளிய வாழ்வு வாழலாம் என்கின்றேன். அதற்காக வருந்துகின்றாள். அவள் விரும்புவதெல்லாம் கண்மூடிப் பின்பற்றும் வாழ்வு. நான் சொல்வதெல்லாம் கண்திறந்து எண்ணும் வாழ்வு. அதனால் அவள் வருந்துகின்றாள். அவளுக் காக நானும் வருந்துகின்றேன்."" 'வாடாமலர்' என்னும் புதினத்தில் இந்தப் போராட்டம் நன்கு விளக்கப்படுகிறது. &6ūT&;IT - ஆடம்பர மோகங்கொண்டு தன் கணவனையுங் கொன்று தானும் அழிந்து போகிறாள். தானப்பன் தன் மனைவியைப் பற்றிக் கருதும் கருத்து வருமாறு : "நான் ஒத்த உரிமை தருகிறேன். அவள் மருட்டு கிறாள். நான் அடங்கவும் முடியாமல் அவளை அடக்கவும் முடியாமல் தடுமாறுகிறேன். என் அன்பு நெஞ்சம் அவளிடம் அன்பை எதிர்பார்க்கிறது.