பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி.பா. 3.35 அன்பை விட வேறு எதை எதையோ மதிப்பவளாக இருக்கிறாள் அவள்." 'பெண்களுக்குப் பணமாகக் கொடுத்தால் மட்டும் போதாது, பூ, திண்பண்டம், சோளி, புடவை நகை இப்படி ஏதாவது:கொடுத்தால்தான் மகிழ்வார் கள், 'இயற்கையாக அன்பு வளரட்டும் என்று பொறுத்திருக்காமல், போராடுவோர் உண்டு. இந்தப் போராட்டத்தில் பலர் முயற்சி தோல்வியுறும். மனைவியின் மனத்தை அவளுடைய பற்றுக்களிலி ருந்து பிரித்துவிட முயலும் கணவனும் துன்புறுகிறான். கணவனுடைய மனத்தை அவனுடைய கற்றுக்களி லிருந்து பிரித்துவிட முயலும் மனைவியும் துன்புறுகிறாள். இவர்கள் பல ஆண்டுகள் பொறுத்து, அவரவர்களின் பற்றுக்களுக்கு உரிமை தந்து, வாழ் வார்களானால் காலப் போக்கில் இரு சாராருக்கும் மற்றப் பற்றுக்கள் குறைந்து, அவர்களின் குடும்பத்தில் மட்டும் பற்று வளர்ந்து அன்பு பெருகுதலைக் கண்டு மகிழ்வார்கள்"." * ‘கரித்துண்டில் வரும் ஒவியர் மோகனும், தான் காதலித்துக் கைபிடித்து வாழ்ந்த நிர்மலாவின்செல்லரித்த வாழ்க்கையினைப் பின்வருமாறு வேதனையோடு குறிப் பிடக்காணலாம். "நாளடைவில் என் அன்பைவிடச் சுற்றுப்புறத் தாரின் அன்பையே அவள் தேடி அலைந்தாள். என் மதிப்பைவிட, வெளியாரின் மதிப்பையே நாடி விரும்பினாள். என் மானத்தை விடத் தன் புகழையே