பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 இலக்கிய ஏந்தல்கள் பெரிதாகக் கொண்டு வாழத் தலைப்பட்டாள். கிடைத்த ஒன்றைப் புறக்கணித்து விட்டுக் கிடைக் காததை நாடி ஏங்கும் குரங்கு மனம் அவளைக் கெடுத்தது. எனக்காச் செய்ய வேண்டிய கடமை களையும் புறக்களித்துவிட்டு, ஊரிலுள்ள பெண் களோடு கூடிக் குலாவுவதிலும், அழைத்த வீடுகளுக் கெல்லாம் ஆர்வத்தோடு போய் வருவதிலும் காலத் தைப் போக்கினாள் இவள் தானா வாழ்க்கைத் துணைவி என்னும் வெறுப்பு என் நெஞ்சத்தில் வேரூன்றி விட்டது வேறு வழி இல்லாமல் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம். என்று சொல்லலாம்" அன்பற்ற அமைதியற்ற கு ம்பம் கணவர் மனைவியர் உறவு செல்வக் குடும்பங்களில் சீரழிந்த நிலைமையில் புரையோடிப்போயிருக்கும் அவலத் தினைக் கலெக்டர் செல்வநாயகத்தின் வேலைக்காரன் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். "அழகு கெட்ட முகத்தில் மாவு பூசுவது போல, அன்பு இல்லாத வாழ்க்கையானாலும் கணவனும் மனைவியும் கைகோத்துக் கொண்டு திரிவார்கள். பகலில் யாராவது:வந்தால் அல்லோ குல்லோ’ என்று கொஞ்சுவார்கள். யாருமில்லாத வேளையில் எலியும் பூனையுமாக இருப்பார்கள். நாய்மாதிரி ஒருவரை ஒருவர் சீறுவார்கள், மாலையில் எல்லோருடைய கண்ணிலும் தெரியும்படியாகக் கைகோத்துக் கொண்டு உலாவுவார்கள். இணை பிரியாமல் கிளப்புக்கும் சினிமாவுக்கும் போவார்கள். வீட்டிற்கு வந்ததும் ஒருவர் வடக்கே பார்ப்பார்; இன்னொருவர் தெற்கே பார்ப்பார். இப்படித்தான் பெரிய ஆபிசர்