பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

НА, шт. 337 களின் பெண்டாட்டிமார்கள். எல்லாம் எங்களுக்குத் தெரியும்' இவ்வாறு ஆடம்பர வேட்கையால் அல்லலுற்று மடிந்த குடும்ப வாழ்வுகளும் பேசப்பட்டுள்ளன. குடும்ப வாழ்வு சிறக்க வழிகள் டாக்டர் மு.வ. அவர்கள் சொல்லினும் எழுத்தைப் போற்றுபவர். எழுத்து பயன் விளைக்கும் எனக் கண்டவர். எனவே பலரின் வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கிப் புலப்படும் குறைகளைக் கூறி, அக்குறைகளைப் போக்கிக் கொள்வதற்குரிய வழிவகைகளையும் குறிப்பிடுகின்றார். நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்யும்' திறத்தில் வல்லவராய் விளங்குகிறார். மனைவியர் குறைகளைக் காட்டியவர், அடுத்துச் சில ஆண்களின் குறைபாடுகளையுஞ் சுட்டிக் காட்டுகிறார். ‘மணிமேகலை’ என்ற பாத்திரத்தின் வாயிலாக 'அகல்விளக்கு என்ற புதினத்தில் கணவர்' பற்றிய கருத்து பின்வருமாறு வெளிப்படுகின்றது. கெட்டவர் அல்ல, பிடிவாதக்காரர். உலகத்தில் அங்கங்கே குடும்பங்களில் மனைவியின் விருப்பம் போல் விட்டுவிட்டுக் கணவன்மார் எதிலும் தலையிடாமல் இருக்கிறார்கள். நம் வீட்டில் அப்பா இல்லையா? என் வீட்டுக்காரர் நான் கட்டுகிற புடவை முதல் வாங்குகிற பொருள்கள் வரையில் எதற்கும் இப்படி அப்படி என்று கட்டளை போடுகிறார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கொடுத்த உரிமைகூட இவர் கொடுப்பதில்லை. சிவப்பு மையில் எழுத வேண்டியதைக் கருப்பு மையில் எழுதினால் ஆசிரியர்