பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 இலக்கிய ஏந் தல்கள் மூடு பனித்திரை யூடு புகுந்தொரு மோகங் கொடுத்ததுவும் ஆடுங் கிளைமிசை ஏறிச் சிறுவர் குதிரை விடுத்ததுவும் ஏடு தருங்கதை யாக முடிந்தன: இன்று வெறுங்கனவே; இப்பாடலின் இறுதியும் கற்பனையும் உணர்வுத்தழலும் குன்றாது விளங்குவது கவிஞர் தமிழ் ஒளியின் இலக்கியத் திறனுக்கு உரைகல். மழைத்துளி எனும் பாடல் துாற்றலின் சந்தமே வாய்த்தாற்போல் நம்மை மயக்குவது; கற்பனைப்பார்வை உடையது. "தந்ததன மென்று பந்தலில்-மலர்ப்பந்தலில் வந்துவிழுந்தது நீர்த்துளி-மழைநீர்த்துளி பச்சைப் பசுந்தழைக் காட்டிலே-இலைமேட்டிலே தைச்சுக் கிடந்தது புன்னகை-மழைமென்னகை! இவ்வாறு சந்தவின்பம் மிக்கக் கவிதைகள் இக்காலக் கவிதைப் போக்குகளை வளப்படுத்தி நிற்கின்றன. காதல் காதல் காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று பாடினார் பாரதியார். மேலும் அவர்,