பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 இலக்கிய ஏந்தல்கள் பொதுவாக மனிதப் பண்பு. மனிதன் தனக்கு உரிமை தேடுகிறான், ஆனால் உரிமை இழந்து தன்னிடம் பழகுகிறவர்களையே நாடுகிறான். பொதுவான மனித இயல்பு இது." - இவ்வாறு டாக்டர் மு. வ. அவர்களின் படைப்புகளில் பலவகை மனப்போக்குக் கொண்ட ஆண்களைக் காணலாம். - குடும்ப வாழ்வு சிறக்க இரு பாடங்கள் - வளமான அமைதியான குடும்ப வாழ்விற்குக் கணவன் மனைவியர் கற்கத்தக்க அடிப்படைப் பாடங்கள் இரண்டு என்பதனை மு.வ. வலியுறுத்துகிறார். அவ்விரண்டில் ஒன்று விட்டுக்கொடுத்து நடக்கும் பெருந்தன்மை; பிறிதொன்று, ஒருவர் குற்றம் மற்றவருக்குத் தெரியாத கண்மூடி வாழ்வு. இவ்விரண்டு பண்புகளும் இனிய இல்வாழ்க்கைச் சிறப்பிற்குப்'பெருந்துணை புரினவவாகும். நாலடியாரும் ஒருவர் பொறை இருவர் நட்பு' என்று பேசும். o முதலாவதாக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அமையவேண்டும் என்பதனைப் பின் வருமாறு குறிப்பிடுகின்றார். 'வீட்டைத் துறப்பது, செல்வத்தை வழங்குவது' உயிரைக் கொடுப்பது இவைகளும் தியாகம்தான். ஆனால் அன்பானவர்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாமும் தியாகம்தான் பெரிய தியாகம். விட்டுக்கொடுக்கும் அந்தப் பெருந்தன்மை இல்லா விட்டால், கணவன், மனைவி கூடி வாழ முடியாது. எவ்வளவு அறிவு இருந்தாலும் போரும் பிணக்கும்