பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ангr, 341 வளருமே தவிர, அன்பும் அமைதியும் வளர முடியாது. அதனால் கணவனும் மனைவியும் கற்க வேண்டிய முதல் பாடம் விட்டுக் கொடுப்பதுதான். அதுவே கடைசிப் பாடமும் ஆகும்." 'நானும் இனிமேல் விட்டுக்கொடுத்து நடப்பது என்று துணிந்துவிட்டேன். உணவு விடுதியில் எந்த மடையனுடைய உதவிக்கோ காத்திருப்பதுபோல், தொழில் செய்யும் இடத்தில் எந்த அநியாயத்தையும் பார்த்துப் பொறுத்திருப்பதுபோல், தெருவில் அக்கம் பக்கத்தில் கொடுமைகளைக் காதால் கேட்டும் பேசாமல் அமைதியாக இருப்பதுபோல், குடும்பத் திலும் அவள் எப்படியாவது போகட்டும் என்று இருந்துவிடப் போகிறேன்' விட்டுக் கொடுத்து வாழும் கணவர் அகல் விளக்கில் வரும் பாக்கியம் அம்மாள் வாழ்க்கை அனுபவம் நிறைந்தவர். எனவே அவர் சந்திரனின் மனைவியிடம் பின்வருமாறு அறிவுரை கூறக் காணலாம். "தாய் தந்தைக்கு அடுத்தபடி கணவர்தான் அன்பு மிகுந்தவர். தன்னலம் இல்லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளடைவில் வளர்ந்து பெருகும். முதலில் பொறுமையோடு அவர் வழியில் நடந்தால், காலம் செல்லச் செல்ல, முழுதும் உன்வழி யில் வந்திடுவார். உலகத்தில் பார்! பெண்கள் இட்ட கோட்டைக் கடக்காமல் எத்தனை ஆண்கள் வாழ் கிறார்கள்! பயந்து வாழ்கிறவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டா. அன்பால் முழுதும் விட்டுக் @・アー22 " " ... .