பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 இலக்கிய ஏந்தல்கள் கொடுத்து வாழ்கிற கணவன்மார் எவ்வளவோ பே இருக்கிறார்கள்." -என்றார் பாக்கியம். இரண்டாவது ஒருவர் குறையினை மற்றவர் உணர்ந்து கலங்காத கண்முடி வாழ்வு கணவன் மனைவியர்க்குள் அமைய வேண்டும் என்பதனைப் பின்வருமாறு புலப்படுத்துகின்றார். ‘எங்களைப் பார்த்து நண்பர் பெருமை கொள்ள, மாறு வாழ்ந்தோம். உள்ளன்பு இல்லாத சுற்றத்தா பொறாமைகொள்ளுமாறு வாழ்ந்தோம்.' "காதல் வாழ்க்கையில் ஒருவகைக் கண்மூடி வாழ்வு வேண்டும். குழந்தை போல் வாழ வேண்டும். தொடக்கத்தில்தான் ஆராய்ச்சி வேண்டும். பிறகு ஆயுள் வரைக்கும் ஆராய்ச்சியும் கூடாது. அறிவும் மிகுதியாகக் கூடாது. ஒருவர் குற்றம் ஒருவருக்குத் தெரியாத அன்பு வாழ்வு-கண்மூடி வாழ்வு வேண்டும்." குற்றத்திற்கு இடையே குணங் கண்டு போற்றுதல் மனித வாழ்க்கை குறையுடையது; எவ்வளவு பெரிய சான்றோர்கள் நடத்தும் வாழ்க்கையானாலும் மதிக்கு மரு வாய்த்தாற்போல ஒரு சிறுகுறை இருக்கும். முற்றிலும் நல்லவர் என்றோ முற்றிலும் கெட்டவர் என்றோ வாழ்க்கையில் ஒருவரையும் காண முடியாது. கடவுள் படைப்பில் குறையில்லாத படைப்பு யாண்டும் எப்போதும் காண இயலாது. மேடு பள்ளம் போல, ஒளி இருள் போல நன்மை தீமைகள் வாழ்க்கையில் கலந்தே அமைந்திருக்கக் காணலாம். எனவே வாழ்வின் எல்லாத் துறைகளிலும் கணவனும் மனைவியும் ஒரே கருத்துக் கொண்டவர்களாக