பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lì, LIP 343 இருப்ார்கள் என்று சொல்லிவிட முடியாது. நூற்றுக்கு ாறு கருத்தொருமித்து வாழ்க்கை நடத்துபவர்களைத் தேடியும் காணல் இயலாது. எனவே கணவர் மனைவியர் தத்தம் கருத்து வேறுபாடுகளுக்கு இடந்தந்து, உள்ள குறை களை-உள்ளக் குறைகளை உயர்த்திக் காணாததோடு, உள்ள நிறையை-குற்றங்களுக்கு இடையேயும் ஒளிவிடும் குணங்களை எண்ணிப் பாராட்டிப் பெருமிதங் கொள்ள வேண்டும். இதனைப் பின்வருமாறு மு. வ. அழகுறப் புலப்படுத்துவார். "குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழ வேண்டும். முள்ளுக்கு இடையே முரட்டு இலைகளுக்கு இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடு கிறது தேனி. அதுதான் வாழத் தெரிந்தவர்களின் வழி. எங்கள் குடும்பத்திலும் குறைகள் உள்ளன. எங்கள் இருவருக்கும் தெரியும். அவற்றைப் பொருட் படுத்துவதில்லை. அதனால் அன்பு வளர்ந்து விட்டது. இனி எங்களை எதுவும் அசைக்க முடியாது. மரம் வேரூன்றி விட்ட பிறகு பெருங்காற்று என்ன செய்யும்? உங்கள் குடும்பம் தொடக்கத்திலிருந்தே. ஒடிக்கப்பட்டும் முறிக்கப்பட்டும் ஆட்டி அசைக்கப் பட்டும் வளர்ந்த மரமாக இருக்கிறது. ஆகையால் இன்னும் ஆழமாக வேரூன்றவில்லை. ஒரு சிறு புயல், வந்தாலும் அல்லல்படுகிறது." பேராசிரியர் அருளப்பர் நெஞ்சில் ஒரு முள்ளில் பின்வருமாறு அறிவுரை பகர்கின்றார். "மனைவி பெரிய உத்தமியாக, கண்ணகி போல வும், தமயந்தி போலவும் இருக்கவேண்டும் என்று