பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9). [on]'. . 345 கணவனுடைய உயர்வையும் முன்னேற்றத்தையுமே நாடுதல் இத்தகைய நல்ல பண்புகள் நினைவுக்கு. வந்தன' கணவரிடம் காணப்படும் குறை மனைவியிடம் ஒரளவு குறை இருக்குமேயானால் கணவனிடம் பேரளவு குறைகள் இருப்பது இயற்கை. பெற்ற தாய் தான் பெற்ற பிள்ளைகளிடம் காணப்படும் குறைகளை மன்னித்து மறப்பதுபோல, மனைவியும் தன் கணவன் குடிகாரராக இருந்தாலும், குதிரைப் பந்தய ஆசை உடையவராக இருந்தாலும், பெண்களை நாடி அலையும் பித்துமணம் உடையவராக இருந்தாலும், நோயாளியாயிருந் தாலும், அல்லது வாழ்வில் எந்தக் குறை உடையவராயிருந்தாலும் அவரை வெறுத்து ஒதுக்கக் கூடாது. அவசியம் காணப்படும் குறைகளைக் கண்டு அவற்றைக் களைந்து அவரைத் திருத்த முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டுமேயொழிய அவரை வெறுக்கக்கூடாது. குறைகளை வெறுப்பதோடு நின்றுவிட வேண்டும். அதற்கு, மேலும் போய் குற்றங் கொண்டவரையே வெறுக்கக கூடாது. நாடே நடுங்கும் திருடனாக இருந்தாலும், சமுதாயமே பழித்தொதுக்கி வெறுக்கும் சண்டாளனாக இருந்தாலும், அப் பொல்லாதவனைப் பெற்றெடுத்த தாய் மனம் வெறுக்க முன் வராதது போல, மனைவியின் மனமும் அமையவேண்டும். மனைவிக்குத் தாய் மனம் வந்துவிட்டால் கணவரை வெறுக்கத் தோன்றாமல், தன்னால் முடிந்த அளவிற்கு அவரிடம் உள்ள குறை களைத் திருத்த-களையத் தோன்றும். கணவனிடத்திற் காணப்படும் குறைகளை முடிந்த அளவிற்குத் திருத்தப் பாடுபட முனையும் மனைவியின் முயற்சி எந்த அளவிற்கு அமையவேண்டும் என்பதனையும் சான்றோர் பெருந்தகை