உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346" இலக்கிய ஏந்தல்கள் டாக்டர் மு. வ. நெஞ்சில் ஒரு முள்ளில் இவ்வாறு குறிப் .பிடுகின்றார். கொஞ்சம் போராட வேண்டும். பிறகு விட்டுக் கொடுக்கவேண்டும். அப்படி நடந்தால்தான் ஆண் களைத் திருத்தமுடியும். அளவுக்குமேல் போராட வும் கூடாது; அளவுக்குமேல் விட்டுக்கொடுக்கவும் கூடாது. எதிலும் அளவு வேண்டும். அளவு தெரிந்துகொண்டு நடந்தால், வாழ்க்கை துன்பம் இல்லாமல் போய்விடும்.' இவ்வளவோடு மு. வ. நிற்கவில்லை. குறைகளுக்கு இடையில் குணத்தைக் கண்டு வாழவேண்டும் என்று வலியுறுத்திய மு.வ. அவர்கள் குடும்ப வாழ்க்கையில் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடியும். அதற்கு இடங்கொடுக்கக் கூடாது என்னும் எச்சரிக்கை செய்கிறார். அவருடைய மிகச் சிறந்த மணிமொழியாக-பொன் மொழியாகக் கொள்ளத்தக்க ஒரு தொடர், "நினைத்தது கிடைக்காதபொழுது, கிடைத்தகைக் கொண்டு திருப்தி யடையவேண்டும்" என்பதாகும். இதனை அவருக்கே ஒரு அழகான முறையில் எழில் கொஞ்சும் தமிழ் நடையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். உள்ளதைக் .ெ க | ண் டு மகிழவேண்டும். வியாபாரம், செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இது வேண்டும். மனைவியிடம் அளவுக்குமேல் பணிவு, அடக்கம், ஒழுக்கம், அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்'