பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§.tir. 35 காதலினால் அறிவெய்தும்-அந்தக் காதற் கவிதைப் பயிரை வளர்க்கும் என்றும் பாடினார். காதலைப் பாடிப் பெருமைப் படுத்தாத கவிஞரில்லை. சங்க இலக்கியம் நுண்ணிய உணர்வுகள் இழையோடக் காதலைப் போற்றியது. முதுமையிலும் காதலைப் போற்ற வேண்டும் என்று முழங்கியது. ஏனெனில் உண்மையான காதல் முதுமையில் வளர்ந்து செப்பருற்றிருக்கும். தோழி தலைவியைத் தலைவன்பால் ஒப்படைக்கும்போது, "இவளின் கட்டழகு கண்டு மனமுவந்த தலைவ! ஒரு காலத்தே இவள் ஏந்தெழில் மார்பகங்கள் தளரினும் நீ இவளைக் கைவிட வேண்டா. பொன் வண்ண மேனியைப் போர்த்துமாறு நீலமணி நிறக் கூந்தல் இன்று நெடியதா யிருந்து இவளழகை மேம்படச் செய்கின்றது. வருநாளில் இக்கூந்தல் வண்ணமிழந்து நரைபட்டு முடியப்படும் போதும் இந்நாளில் நின் நெஞ்சகத்தே நிலவும் ஈடுபாடு இத் தலைவிபால் என்றும் இருத்தல் வேண்டும்" என்று கூறுவதாக அமைந்துள்ள நற்றிணைப் பாடல் வருமாறு : அன்னாங் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர! இன்கடுங் கள்ளின் இழையணி நெடுந்தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணிஇயர் வெண்கோட்டு யானைப் பேனர் கிழவோன் பழையன் வெல்வாய்த் தன்னநின் பிழையா கன்மொழி தேறிய இவட்கே, 10 : Goor (60[زBibm/ مسے