350 இலக்கிய ஏந்தல்கள் ஆசையால் காதலனைத் துறந்து மற்றொருவனோடு ஒடிப்போய் விட்ட பிறகு, இறுதியில் தான் இறப்பதற்கு முன் தன் எண்ண அலைகளை எழுத்தாக்கி டயரி எழுது கிறாள். அதில் நிர்மலா குறிப்பிட்டிருக்கும் கருத்து மிகமிக ஆழ்ந்து எண்ணத்தக்கது. வாழ்க்கை தொடங்கிய அன்று முதல் இன்றுவரை யில் அந்த அறைக்குள் நீங்கள் எட்டிப் பார்த்ததும் இல்லை. என்ன இருக்கிறது என்று அறிய முயன்றதும் இல்லை. ஐயுற்றுக் கேட்டதும் இல்லை. இவ்வளவு பெருந்தன்மையோடு மனைவிக்கு உரிமை கொடுத்து அந்த உரிமை கெடாமல் நடந்துகொள்ள வேறு ஆண்களால் முடியுமா தெரியவில்லை. இந்தப் பெருந்தன்மையை நோகின்றேன். நோயாளியின் வேண்டுகோளுக்கு இசைந்து, அவனுடைய முதுகில் உள்ள கட்டியைத் தொடாமலே பார்த்துச் செல்லும் மருத்துவர்போல் இருந்தீர்கள். அதனால் கட்டிப் பெரியதாய்ப் புரையோடி, உடலையே சாய்க்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது." இதனால் மனைவிக்கு அளவுக்கு மீறி உரிமை வழங்குவது அடிப்படை வாழ்விற்கே ஆபத்தாக முடிகின்றது என்பதனை மு.வ. வற்புறுத்தக் காணலாம். "வாடாமலர்’ என்ற புதினத்திலும் இக்கருத்து விளக்கப் படுகின்றது. நான் ஒத்த உரிமை தருகிறேன். அவள் மருட்டு கிறாள். நான் அடங்கவும் முடியாமல், அவளை அடக்கவும் முடியாமல் தடுமாறுகிறேன். என் அன்பு நெஞ்சம் அவளிடம் அன்பை எதிர்பார்க்கிறது, அன்பைவிட வேறு எதை எதையோ மதிப்பவளாக இருக்கிறாள் அவள்.'" - |
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/351
Appearance