b) urr. 353 "யாராவது ஒருளர் விட்டுக் கொடுத்தால் தான் குடும்பத்தில் ஒத்துப் போக முடியும் என்பது அவர் தம்முடைய வாழ்க்கையில் கற்ற ஒரே காடம். அந்தப் பாடத்தைக் கண்மூடிப் பின்பற்றிப் பின்பற்றி உரிமை யெல்லாம் இழந்தார்! உண்ணவேண்டும் என்று மனைவி சொன்னால் உண்பார்; உட்காரவேண்டும் என்று மனைவி சொன்னால் உட்காருவார்; எழு என்று சொன்னால் எழுவார். உறங்கு என்று சொன்னால் உறங்குவார். இந்த அளவில் நின்றுவிட்டால் பசு எனலாம்; ஆடு எனலாம் யந்திரம் எனலாம்; பொம்மை எனலாம்; கவலை இல்லை. ஆனால் மனைவி அளரைநோக்கி எளிய ஒருவனை உதை என்றால் உதைப்பார்; கொல் என்றால் கொல்லுவார். ஒரு பொருளைத் திருடு என்றால் திருடுவார். இப்படி வாழ்வதால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கிறது என்பது அவருடைய நம்பிக்கை." கணவன் எவ்வழி அவ்வழி மனைவியர் கணவன் கருத்திற்கியைப வாழவேண்டுவது மனைவி யின் கடமை என்பதே மு.வ. அவர்களின் உறுதியான இறுதியான அடிப்படைக் கொள்கை எனலாம். இதனைப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கக் காணலாம். ‘எப்படி இருந்தாலும் நான் தக்கபடி நடந்து கொள்வேன். நானும் வேண்டுமானால் அவரோடு சேர்ந்து குடிப்பேன் துணையாக வாழப் பிறந்தேன். முடிந்தால் திருத்துவேன். இல்லையானால் எப்படி யாவது வாழ்க்கைத் துணையாக இருந்து சாவேன். அவர்குளித்தால் நானும் குளிப்பேன். அவர் சாக்கடை யில் விழுந்தால் நானும் விழுவேன். அவர் சந்தனம் விரும்பினால் நானும் சந்தனம் விரும்புவேன். அவர்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/354
Appearance