fo.com. 355 . வாழ்க்கை! வெறும் விளையாட்டு அல்ல. பெரிய கோட்டை. கட்டுவது அருமை. இடிப்பது எளிமை. அறுபது ஆண்டு ஒற்றுமையாக வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சிறுமணம். பொல்லாத மனம் பிரித்துப் பாழாக்கி விடும். இந்தக் காலத்தில் அறிவும் ஆராய்ச்சியும் தொத்து நோய் போல் பரவுகின்றன. அவைகள் இருக்க வேண்டிய இடம் வேறே. செலுத்த வேண்டிய செங்கோல் வேறே".' ஆண் எண்ணுவதுபோல் பெண்ணும் எண்ண வேண்டும். இருவரும் ஒருங்கே உண்பதும் உறங்குவதும் பெருமை அல்ல. ஒருங்கே எண்ணவேண்டும். எண்ணத்தில் ஒத்திருந்தால் அதுதான் குடும்ப இன்பம் எண்ணத்தில் மாறுபட்டிருந்தால் அதுதான் குடும்பத் துன்பம்." "பறவைகள் அன்பாக வாழ்கின்றன. அவை களுக்கு வாய் இல்லை; பேச்சு இல்லை; பிணக்கும் இல்லை. மக்கள் வாழ்க்கையில் வாய்தான் வம்பும் துன்பும் செய்கிறது; பேச்சு வளர்கின்றது." 'கணவன் என்றால் உலகத்தில் பெறமுடியாத பெருஞ்செல்வம் என்பதும் அந்தக் கணவனுக்காக எந்தத் துன்பத்தையும் பொறுத்துத்தான் வாழ வேண்டும் என்பதும் அவள் வழிவழியாகப் பெற்ற குடும்ப அறிவு." "திருமணமான பிறகு கணவரின் விருப்பப்படி நடக்கிறேன்.அதனால் வாழ்க்கை அமைதியாக நடக் கிறது. நீங்கள் கற்றுக்கொடுத்த வழிதான். ஒருவர் விருப்பப்படி என்றால் வாழ்க்கை நன்றாக நடக் கிறது. இருவர் விருப்பம் என்றால் இரண்டு வழி
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/356
Appearance