பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 இலக்கிய ஏந்தல்கள் ஆகிறது. போராட்டம் ஆகிறது. நல்லதோ கெட்டதோ அவர் விருப்பப்படி நடக்கட்டும் என்று இருக்கிறேன். அவர் படித்தவர். தெரிந்தவர். உலகம் அறிந்தவர். உலகத்துக்குக் கட்டுப்பட்டவர். நான் வீட்டோடு வாழ வேண்டியவள். அதனால் அவர் விருப்பம்தான் பெரிது. அ ைத உணர்ந்து நடக்கிறேன். ஒரு துன்பமும் இல்லை." பிணக்குவதிலும் பிரிதல் நல்லது திருமணங்கள் எப்படி நடந்து முடிகின்றன. நல்ல துாய அன்பால் இணைந்தவர்கள் வாழ்க்கையே அன்பை வளர்த்து, குறைகளை மறந்து வாழ நினைக்காதபோது முறிந்து விடுகின்றது. இதனைப் பின்வருமாறு மு.வ. விளக்குகிறார் : 'திருமணத்திற்குப் பிறகுதான் கணவனுக்கும் மனைவிக்குமுள்ள வேறுபாடுகள் புலப்படுகின்றன. அன்பு வேகமாக வளர்ந்தால் வேறுபாடுகளைக் கடந்து நெருங்க முடிகிறது. அன்பு வளராவிட்டால் எங்கள் வாழ்வுபோல் முறிகிறது.?? வாழ்க்கை அப்பா! வாழ்க்கை! வெறும் விளை யாட்டு,அல்ல, பெரியகோட்டை, கட்டுவது அருமை. இடிப்பது எளிமை. அறுபது ஆண்டு ஒற்றுமையாக வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சிறு மனம் பொல்லாத மனம் பிரித்துப் பாழாக்கி விடும்.400 உள்ளம் பொருந்தாதவர்கள் வாழ்வில் ஒன்றுபட்டு விட்டால் அவ்வாழ்வில் போராட்டம் மிகுகின்றது. சமுதாயத்தில் நாளுக்குநாள் நாகரிக முதிர்ச்சி காரண மாகக் கணவன் மனைவியர் வாழ்க்கையில் அமைதி சீர்