பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 இலக்கிய ஏந்தல்கள் என் கலையுலகத்திற்கு அவள் இடையூறாக : தோன்றினாள். அவளுடைய ஆடம்பர உலக சிெது நான் இடையூறாகத் தோன்றினேன். விட்டுப் பிரிய வழி இல்லாமல் சட். மும் சமுதாயமும் குறுகி , நின்றன. குடும்பம் அப்போது இந்தச் சிறையைவி பொல்லாத சிை றயாக த் தோன் 303 يلي هيو இவ்வாறு உள்ளத்தில் உறவில்-இரு துருவங்களாக வாழ்பவர்கள் வாழ்நாள் முழுதும் துன்பம் உறுகிறார்க

வாசற்படிக்கு உள்ளே உலகம் அன்பு வாழ்வு கெடுவதற்குப் பிறிதொரு காரணம் வாசற்படிக்கு உள்ளே உலகம் வருவதாகும். இதனை மு.வ. அந்த நாளில் அழகுறக் கூறுகின்றார். 'பழைய வழக்கத்தை எப்படி விடுவது என்று எவ்வளவோ தயங்கினேன். பிறகு உலகம் என்று உலகத்தை எண்ணிக்கொண்டு அன்பான குடும்ப வாழ்க்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று எண்ணினேன். பழைய வழக்கங்களை மாற்றக் கற்றுக்கொள்வதிலே பெருமையும் அஞ்சாமையும் முன்னேற்றமும் இருப்பதை நான் அப்போது உணர வில்லை. உலகத்துக்கு அஞ்சுகின்றவர்கள் இல் வாழ்க்கையில் ேத ல் வி அடைகின்றார்கள். உலகத்துக்கு அஞ்சாதவர்கள் இல்வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள். உலகமும் வேண்டும்: இல்வாழ்க்கையும் வேண்டும். ஆனால் ஒன்று வீட்டுக்கு வெளியே; மற்றொன்று வீடடுக்கு உள்ளே. வாசற்படிக்கு உள்ளே உலகம் வந்தால் அன்பன மனங்களில் அல்லல் புகுந்துவிடும."